இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தற்போது மிகவும் முக்கியமான இளம் வீரராக ரியான் பராக் கவனிக்கப்படுகிறார். இந்த நிலையில் அவருடைய பந்துவீச்சை அவர் எப்படி மேம்படுத்தினார்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் எட்டுப் பந்துகள் வீசி அதில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து அவரது பந்து வீச்சு குறித்து தற்போது பலரும் பாராட்டி பேசி வருகிறார்கள். ஆனால் இது ஏதோ ஒரு நாளில் வந்தது கிடையாது என்றும், இதற்குப் பின்னால் கடுமையாக உழைத்து உள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
ரியான் பராக்கின் தேவை
இந்திய வெள்ளை பந்து அணிக்கு வலது கையில் ஆப் ஸ்பின் வீசும் ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டர் தோனி காலத்திற்குப் பிறகு தேவையாக இருந்து கொண்டே வருகிறார். அதாவது இப்படி வரக்கூடியவர் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் பகுதி நேரமாக ஆப் ஸ்பின் பந்து வீச வேண்டும். உதாரணமாக வீரேந்தர் சேவாக் மற்றும் சுரேஷ் ரெய்னா மாதிரி இருக்க வேண்டும்.
இந்திய அணிக்கு இடது கையில் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் இந்த வேலையை மிகச் சிறப்பாக செய்யக்கூடியவராக இருக்கிறார். தற்பொழுது நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸ் சிறப்பாக இதைச் செய்கிறார். இந்திய அணிக்குத்தான் இது மிகப்பெரிய பற்றாக்குறையாக இருந்து வந்தது. தற்பொழுது இது ரியான் பாரத் தீர்த்து வைக்கிறார் என்பதால் அவருடைய தேவை அதிகரிக்கிறது.
ஒரு சீசனில் 350 ஓவர்கள்
இது குறித்து ரியான் பராக் பேசும் பொழுது ” நான் பந்துவீச்சில் ஏதோ சமீபத்தில் உழைத்து முன்னேறி இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் கிடையாது. நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டு உள்நாட்டு சீசனிலும் சராசரியாக 350 ஓவர்கள் நான் பந்துவீசி இருக்கிறேன்.
இதையும் படிங்க : 10 வருட முன்.. அவங்க இருந்தப்போ பாக் அணியின் லெவல் வேற.. ஆனா இப்போ பரிதாபமா இருக்கு – அஸ்வின் பேட்டி
இப்படியான உள்நாட்டுப் போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்படாத காரணத்தினால் நான் பந்து வீசுவது யாருக்கும் தெரிவதில்லை. இதை நான் நீண்ட காலமாக செய்து வருகிறேன். மேலும் இதை நான் விரும்பி செய்கிறேன். ஆனால் இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடரிலும் பங்கு வீசும் பொழுது அது கவனிக்கப்படுகிறது. உண்மையில் நான் இப்பொழுது மாதிரிதான் அப்பொழுதும் பந்துவீசி கொண்டிருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.