இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரான ரியான் பராக் வித்தியாசமான முறையில் ஸ்லிங் ஆக்ஷனில் பயன்படுத்தி பந்து வீசிய விவகாரத்தில் அம்பயர் அதனை நோ- பால் என்று வழங்கினார். இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
ரியான் பராக்கிற்கு கொடுக்கப்பட்ட நோ-பால்
இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக பந்து வீசியபோது ஆட்டத்தின் 11 வது ஓவரை பகுதிநேர சுழற்சிந்து வீச்சாளரான ரியான் பராக் வங்கதேச பேட்ஸ்மேன் முகமதுல்லாவிற்கு பந்து வீசினார். ஐபிஎல் தொடரில் அவர் பந்து வீசியதை போன்று இரண்டாவது போட்டியிலும் கையை ஒரு பக்கமாக சாய்வாக வைத்து மலிங்கா வீசுவதை போன்று தனது பந்துகளை டெலிவரி செய்தார். அவரது மூன்றாவது பந்தில் லெக் அம்பையருடன் விவாதித்த கள நடுவர் அதனை நோபால் என்று அறிவித்தார்.
இதனை கவனித்த ரசிகர்கள் அவர் கையை சாய்வாக வைத்து வீசியதால்தான் அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று நினைத்தனர். ஆனால் அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் ரியான் பராக் பேக் புட்டில் கிரீசை விட்டு வெளியே சென்று பந்து வீசியதால்தான் அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது
அதாவது கிரிக்கெட் விதி 21 இன் படி ஒரு பந்துவீச்சாளரின் பின் பாதம் ரிட்டன் க்ரீஸ் என்று அழைக்கப்படும் பந்து வீசும் பக்கவாட்டுக் கோடுகளை தொடாமல் கால்களை உள்ளே வைத்து பந்து வீச வேண்டும். மேலும் முன் கால் ஸ்டெம்ப்களுக்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கோட்டின் மேல் பாதத்தை வைத்து வீச வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று தவறும் பட்சத்தில் அது அம்பையரால் சரிபார்க்கப்பட்டு நோபால் என்று அறிவிக்கப்பட்டு போன சாக மற்றொரு பந்து வீசப்படும். ரியான் பராக் அந்த பந்தை பக்கவாட்டு கோடுகளுக்கு வெளியே பின் காலை வைத்து வீசி இருக்கிறார்.
இதையும் படிங்க:7 பேர் வீசியும்.. ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் பவுலிங் தராத காரணம் இதுதான் – இந்திய கேப்டன் சூரியகுமார் பேட்டி
இந்த விதிமுறையின் அடிப்படையில் தான் ரியான் பராக்கிற்கு நேற்று வீசப்பட்ட ஒரு பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டு ப்ரீ ஹிட் வழங்கப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக அடுத்த பந்து பெரிய ரன்களுக்கு செல்லாமல் 1 ரன் மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கௌதம் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தற்போது டி20 கிரிக்கெட்டில் பந்து வீசத் தெரிந்த பேட்ஸ்மேன்களை பயன்படுத்தி வித்தியாசமான அணுகுமுறைகளை முயற்சித்து வருகின்றனர்.