7 பேர் வீசியும்.. ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் பவுலிங் தராத காரணம் இதுதான் – இந்திய கேப்டன் சூரியகுமார் பேட்டி

0
855

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி பந்து வீசும் போது ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் ஹர்திக் பாண்டியா பந்து வீசாத காரணம் குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நிதீஷ் குமார் ரெட்டி அபார ஆட்டம்

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நித்திஷ் குமார் ரெட்டி 34 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஏழு சிக்சர் என 74 ரன்கள் குறித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர் என 53 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி இந்த போட்டியில் ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு பந்த வீசும் வாய்ப்பு கேப்டன் சூரியகுமார் யாதவ் வழங்கவில்லை. இது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கான விளக்கத்தை அவரே கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா பந்து வீசாத காரணம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “தொடக்கத்தில் நாங்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அதற்குப் பிறகு பேட்டிங் சிறப்பாக இருந்தது. குறிப்பாக நான் அது போன்ற சூழ்நிலைகளை விரும்புகிறேன். 5,6,7ம் வரிசையில் களம் இறங்கி சிறப்பாக விளையாடும் சூழ்நிலையை விரும்பினேன். நான் நித்திஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு ஆகியோர் பேட்டிங் செய்த விதத்தை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. நான் எப்படி விரும்பினேனோ அதேபோன்று அவர்களது பேட்டிங் இருந்தது.

வீரர்களிடையே ஜெர்சி மட்டுமே மாறுகிறது தவிர மற்ற அனைத்து திறமையும் அப்படியே இருக்கிறது. எனவே களத்தில் இறங்கி சிறப்பாக விளையாட வேண்டியது மட்டும்தான் மீதம் இருக்கும் செயல். குறிப்பாக வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு வகையான பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக 170 முதல் 170 ரன்கள் குவிக்கும் ஆட்டங்களில் வெவ்வேறு பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க நினைத்தேன். பகுதி நேர பந்துவீச்சாளர்கள் கடினமான ஓவர்களை வீச முடியுமா? சில சமயம் ஹர்திக் பாண்டியா பந்து வீச மாட்டார், வாஷிங்டன் சுந்தர் பந்து வீச மாட்டார்.

இதையும் படிங்க:கம்பீர் அவருக்கு மட்டும் ஏன் அநியாயம் பண்றீங்க.. இந்திய டீம்ல இது நியாயமில்ல – ஆகாஷ் சோப்ரா வருத்தம்

எனவே மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதை பார்க்க மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய நாள் நிதீஷ்குமார்க்கு சிறப்பாக அமைந்தது. அதை அவர் மகிழ்ந்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -