இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நான்காவது நாளில் கேஎல்.ராகுலிடம் ரிஷப் பண்ட் களத்தில் பேசிய ஒரு விஷயம் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி திருப்பி 465 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. மேலும் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 90 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழக்க போட்டி பரபரப்பான கட்டத்துக்குள் நுழைந்தது.
இந்திய அணிக்கு ஏற்பட்ட இழப்பு
இன்று நான்காவது நாள் போட்டி தொடங்கி பிரைடன் கார்ஸ் வீசிய முதல் ஓவரில் மேற்கொண்டு இரண்டு ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் இந்திய கேப்டன் கில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி 92 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.
இந்த சூழ்நிலையில் அனுபவ வீரர் கேஎல்.ராகுல் உடன் ரிஷப் பண்ட் களம் இறங்கினார். வழக்கமாக ரிஷப் பண்ட் எடுத்ததும் அதிரடியாக விளையாடி மத்தியில் தடுப்பாட்டம் ஆடுவதை தன்னுடைய ஸ்டைலாக வைத்திருக்கிறார். இதன்படி இன்றும் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். இந்த நேரத்தில் கேஎல்.ராகுல் அவரிடம் சென்று பந்து நன்றாக தெரிகிறது எனவே பொறுமையாக விளையாடு என்று கூறினார்.
அதிக மரியாதை கொடுத்துட்டேன்
இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் வந்து வீசி கொண்டிருந்த பொழுது கேஎல் ராகுலிடம் பேசிய ரிஷப் பண்ட் “நான் இவர் வீசும் பந்துக்கு தரவேண்டிய மரியாதையை விட அதிக மரியாதையை கொடுத்து விட்டேன்” என்று இதற்கு மேல் தன்னால் முடியாது என்பது போல கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்த பந்து இறங்கி வந்து நேராக பவுண்டரி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எதுக்கு இப்படி பேட்டை சுத்துறீங்க பண்ட்.. நீங்க துணை கேப்டன் என்பது நியாபகம் இருக்கா? தினேஷ் கார்த்திக் சராமாரி கேள்வி
இப்படியான நிலையில் ரிஷப் பண்ட் தன்னுடைய பாணியை மாற்றிக் கொண்டு உடனடியாக மெதுவாகவே விளையாடினார். இன்று உணவு இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 159 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. கேஎல்.ராகுல் 157 பந்தில் 72 ரன்கள், ரிஷப் பண்ட் 59 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். இந்த ஜோடி பொறுமையாக விளையாடிய 140 பந்தில் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது.






