எதுக்கு இப்படி பேட்டை சுத்துறீங்க பண்ட்.. நீங்க துணை கேப்டன் என்பது நியாபகம் இருக்கா? தினேஷ் கார்த்திக் சராமாரி கேள்வி

0
300

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கின்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 6 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

90 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் எட்டு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றினார். எனினும் மறுமுனையில் கேல் ராகுல் அரைசதம் அடித்து அபாரமாக விளையாடி வந்தார்.

- Advertisement -
  • பொறுப்பற்ற முறையில் ஆடிய பண்ட்:

இந்த சூழலில் ஐந்தாவது வீரராக களம் இறங்கிய ரிஷப் பண்ட் திடீரென்று பேட்டை  சுற்றி வழக்கம் போல் அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் பண்ட் ஆடும் விதத்தை பார்த்து அவர், விரைவில் ஆட்டம் இழந்து விடுவாரோ என்று ரசிகர்களே பயந்தனர். இந்த இன்னிங்ஸ் என்பது இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றால் ராகுல், பண்ட் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஆனால் பண்ட் பேட்டை  சுழன்று சுழன்று அடித்தார். அப்போது கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் பண்ட்க்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

- Advertisement -

புரிந்து கொண்டு விளையாடுங்கள்:

“தற்போது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் இருக்கின்றது. ஆனால் பண்ட் அதிரடியாக விளையாடுகிறேன் என்று தன்னுடைய விக்கெட்டை விட்டு விடக்கூடாது. மறுமுனையில் ராகுல் அமைதி காத்துக் கொண்டு விளையாடி வருகிறார். இதனால் பண்ட் பொறுப்பான ஆட்டத்தை விளையாடி அவருக்கு துணை நிற்க வேண்டும்.”

இதையும் படிங்க: சுப்மன் கில் விக்கெட்டை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இந்திய பவுலர்கள்.. காரணம் என்ன தெரியுமா?

“பார்ட்னர்ஷிப்பை அதிகப்படுத்த வேண்டும். தேவையில்லாமல் அனைத்து பந்துகளையும் அடித்து ஆடி தனது விக்கெட்டை பறி கொடுத்து விடக்கூடாது. ரிஷப் பண்ட் இப்போது விளையாடும் விதம் அணிக்கு உதவிகரமாக இல்லை. தனிநபர் ஆட்டத்தை விட அணி தான் முக்கியம் என்பதை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். அணியில் துணை கேப்டனாக நீங்கள் இருக்கின்றீர்கள். அதற்கான பொறுப்பை உணர்ந்து விளையாடுங்கள்” என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

- Advertisement -