இந்த ஆண்டு கடந்த மாதத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, பும்ரா தாண்டி தன்னை இன்னொரு இந்திய வீரரே செயல்பாட்டில் ஆச்சரியப்படுத்தினார் என இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால் இந்திய அணியில் எல்லா வீரர்களுமே அவர்களுக்கான பங்கை செய்திருந்தார்கள். தொடர் முழுக்க சரியாக விளையாடாத விராட் கோலி இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கத்தில் பேட்டிங்கில் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் சிறப்பாக இருந்தார்கள்
இந்திய அணியின் பந்துவீச்சில் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். இப்படி ஒருங்கிணைந்த செயல்பாடு இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் அணியில் இருந்த மற்றவர்களும் ஏதாவது போட்டிகளில் சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தன்னை ஆச்சரியப்படுத்திய வீரராக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இருந்தார் என்று கூறி இருக்கிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் 171 ரன்கள் எடுத்திருந்தார். மூன்றாவது வரிசையில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி இருந்தார்.
இது குறித்து பேசியிருக்கும் ரவி சாஸ்திரி கூறும் பொழுது “என்னைப் பொறுத்த வரையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் என்ன ஆச்சரியப்படுத்திய வீரர் ரிஷப் பண்ட். அவர் எவ்வளவு திறமையானவர்? அவரால் என்ன செய்ய முடியும்? என்று நமக்கு நன்றாகவே தெரியும். அவர் எவ்வளவு ஒரு மோசமான விபத்தில் இருந்து, மரணத்தின் வாசலில் இருந்து தப்பித்து வந்து இப்படியான ஒருசெயல்பாட்டை வெளிப்படுத்தி இருப்பது நம்ப முடியாதஅளவுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.
இதையும் படிங்க : என்ன டீம்ல எடுக்காதீங்க அத பண்ண சொன்னா.. நியூசிலாந்து அணிகிட்ட சொன்னேன்.. கிளென் பிலிப்ஸ் பேட்டி
ஒருவர் குணம் அடைந்து வந்து இந்த வழியில் செயல்பட்டாக வேண்டும். ஆனால் ரிஷப் பண்ட் குணமடைந்ததும் எதையுமே தவறவிடவில்லை. ஆனாலும் அவர் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கொஞ்சம் அழுத்தத்தை உணர்ந்து இருக்க வேண்டும்.அவர் திரும்பி வந்த செய்த விஷயங்கள் அத்தனையுமே செய்வதற்கு எளிதான விஷயங்கள் கிடையாது. குறிப்பாக விக்கெட் கீப்பிங் அவ்வளவு எளிதான விஷயமே இல்லை” என்று கூறி இருக்கிறார்.