நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய கிலென் பிலிப்ஸ் இதுவரை தனது 115 போட்டிகளில் ஏழு போட்டிகளில் மட்டுமே விக்கெட் கீப்பராக பணியாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் விக்கெட் கீப்பிங் பணி தன்னை எவ்வாறு வெறுப்படைய வைத்தது என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
27 வயதான நியூசிலாந்து அணியைச் சேர்ந்த பிலிப்ஸ் 2017ஆம் ஆண்டு சர்வதேச அணிக்காக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். முதன்முதலாக விக்கெட் கீப்பராக தனது பணியை தொடர்ந்த பிலிப்ஸ் 2018ம் ஆண்டிலிருந்து பேட்டிங் ஆல் ரவுண்டராக மாறினார். இதுவரை மொத்தமாக 115 போட்டிகளில் விளையாடியிருந்தாலும் அதில் ஏழு போட்டிகளில் மட்டுமே பணியை மேற்கொண்டு இருக்கிறார்.
2020ஆம் ஆண்டு வரை டி20களில் விளையாடிய பிலிப்ஸ் விக்கெட் கீப்பராக இருந்தபோது 18.40 சராசரியில் 117 பேட்டிங் செய்திருக்கிறார். ஆனால் விக்கெட் கீப்பிங் செய்யாத போட்டிகளில் 34.28 பேட்டிங் சராசரியுடன் 143.67 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் விக்கெட் கீப்பிங் பணியை தன்னை எவ்வளவு வெறுப்படைய வைத்தது என்று அவரே முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இது குறித்த அவர் கூறும் போது “எனக்கு முதுகில் காயம் ஏற்படுவதற்கு முன்பாகவே நான் விக்கெட் கீப்பிங் செய்யும் பணியை வெறுத்தேன். ஆனால் முதுகில் ஏற்பட்ட காயம்தான் என்னை முற்றிலும் கீப்பிங்கில் இருந்து வெளியே வர தூண்டியது. நான் விக்கெட் கீப்பராக விளையாடப் போகிறேன் என்றால் இனி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தன்னை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் எனவும் சொல்ல ஆரம்பித்தேன். எனது வாளால் வாழ்வோம் இல்லையேல் வீழ்வோம் என்ற முடிவில்தான் அந்தப் படகில் இருந்து குதித்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு அது நன்றாக பலன் அளித்தது.
நான் வெறுத்ததை ஆர்வத்துடன் செய்ய விரும்புவதை விட நான் ரசித்ததை செய்வதற்கு விரும்பினேன். ஆடுகளத்தில் உள்ள அனைவரிடமும் வெறுப்படையும் நிலைக்கு வந்தேன். உங்களால் இடது புறம் அல்லது வலது புறம் ஒரு பத்து மீட்டர் தூரம் மட்டுமே நகரக்கூடிய நிலையில் மாட்டிக் கொள்கிறீர்கள். பந்து உங்களுக்கு வராமல் எந்த அசைவும் இல்லாமல் இருப்பது போல் இருந்தால் அது விளையாட்டில் எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தாது.
இதையும் படிங்க:ஓடி ஒளிய முடியாது.. இலங்கை கிரவுண்ட்ல இதை செஞ்சாலே போதும்.. இந்திய அணியை தோற்கடிப்போம் – சனத் ஜெயசூர்யா நம்பிக்கை
எந்த அசைவமே இல்லாமல் ஓடாமல் நான் நின்று கொண்டிருந்தால் எதை அனுபவித்து என்ன பயன். நான் பந்து வீசத் தொடங்குவதற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு விளையாட விரும்பினேன் என்று உணரவில்லை. பங்களாதேஷில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் செயல்பட்டது நன்றாக உணர வைத்தது. நான் வெளியே சென்று 25 ஓவர்கள் பந்தும் வீச முடியும் பேட்டிங்கும் என்னால் செய்ய முடியும்.அதில்தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.