ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கைப்பற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா வெற்றி குறித்து நிறைய பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சபித்தது. விராட் கோலி 59 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா “கடந்த மூன்று நான்கு வருடங்களாக நாங்கள் அனுபவித்ததை சுருக்கமாக சொல்வது மிகவும் கடினம். நாங்கள் தனிநபராகவும் ஒரு அணியாகவும் மிகக் கடுமையாக உழைத்தோம். இன்று நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு திரைக்குப் பின்னால் நிறைய வேலைகள் நடந்திருக்கிறது. இன்று செய்து வெற்றி வந்துவிடவில்லை. மூன்று நான்கு ஆண்டுகள் உழைத்திருக்கிறோம். அதன் விளைவுதான் இப்பொழுது உலகக் கோப்பையை வென்று இருக்கிறோம்.
கடந்த காலங்களில் நாங்கள் பல உயர் அழுத்த விளையாட்டுகளை விளையாடி இருக்கிறோம். மேலும் தோல்வி அடைந்த அணியாகவும் இருந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்து கொள்கிறார்கள்.நம் கையில் போட்டி இல்லாத பொழுது நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இதுவே உதாரணம்.ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுகின்ற நிலையில் இருந்த பொழுதும், நாங்கள் ஒரு அணியாக இணைந்து விளையாடினோம்.
ஒட்டுமொத்த ஒரு அணியாக நாங்கள் இந்த வெற்றி பெறுவதற்கும் மிக மோசமாக விரும்பினோம். இப்படி ஒரு பெரிய வெற்றிக்கு பின்னால் திரை மறைவில் நிறைய பேர் இதற்காக உழைத்திருக்கிறார்கள். இதில் உள்ள அத்தனை பேர் மனமும் இணைந்தால்தான் இப்படி ஒரு வெற்றி சாத்தியமாகும்.
இதையும் படிங்க : என் இதய துடிப்பயே எகிற வச்சிட்டீங்கபா.. உலகக் கோப்பையை தூக்கிட்டு வந்தது செம – தல தோனி அட்டகாச வாழ்த்து
எனக்கு கிடைத்திருக்கும் பையன்கள் மற்றும் அணி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் என அவர்களை அவர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். முதலில் அணி நிர்வாகம் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என சுதந்திரத்தை கொடுக்க வேண்டும். பின்பு வீரர்கள் அதை போய் களத்தில் செய்ய வேண்டும். இந்தத் தொடர் முழுக்க நாங்கள் அற்புதமாக இருந்தோம்” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.