சிகிச்சையில் கண்விழித்ததும்.. ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி இதுதான்.. மெடிக்கல் மிராக்கிள் – மருத்துவர் பேட்டி

0
339
Rishabh

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தது குறித்து அவரது மருத்துவர் முக்கியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் மோசமான சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு, அடுத்த ஓராண்டுக்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டார். ஆனாலும் மறுவாழ்வில் கடுமையான ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தி மீண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறும் பொழுது ” ரிஷப் பண்ட் கண்விழித்ததும் கேட்ட முதல் கேள்வி என்னால் மீண்டும் விளையாட முடியுமா? என்பதைத்தான். அவர் தாயார் அவரால் எழுந்து நடக்க முடியுமா என்று கேட்டார். ஆனால் அவருக்கு காயங்கள் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தினால் முழங்காலில் முற்றிலுமாக மறுசீரமைப்பு தேவைப்பட்டது”

“இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவரால் பல் துலக்க கூட முடியவில்லை. மேலும் அவரால் அவரது கைகளை அசைக்கவும் முடியவில்லை. அந்த அளவிற்கு அந்த பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தவர்களின் உதவியுடன் அவர் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தார்”

- Advertisement -

எங்களுக்கு சந்தேகம் இருந்தது

“இதற்குப் பிறகு ஊன்றுகோல் உதவியுடன் சில மாதங்கள் கழித்து நடக்க ஆரம்பித்தார். இருந்த போதிலும் மீண்டும் அவர் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று எங்களுக்கு சந்தேகம் இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நாங்கள் அவரிடம் ‘முதல் அதிசயம் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். இரண்டாவது அதிசயம் உங்கள் கால்கள் சரியாகி விட்டன. நீங்கள் மீண்டும் கிரிக்கெட் விளையாடினால் அது மூன்றாவது அதிசயமாக இருக்கும் என்று கூறினோம்”

இதையும் படிங்க : இந்திய அணி உடன் பயிற்சியில் இணைந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. பின்னணியில் கேப்டன் கில்.. என்ன நடந்தது?

“அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வர 18 மாதங்கள் ஆகும் என அவரிடம் கூறினோம். சீக்கிரத்தில் இயல்பாக்கி அவரை கிரிக்கெட் விளையாட வைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது. நாங்கள் எங்களால் முடிந்ததை செய்வதில் உறுதியாக இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட அவர் வேகமாக மீண்டு வந்து மிக கடுமையாக உழைத்து இந்த நிலையை எட்டி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -