இந்திய அணி உடன் பயிற்சியில் இணைந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. பின்னணியில் கேப்டன் கில்.. என்ன நடந்தது?

0
468
Gill

தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் திடீரென பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய வீரர் இணைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் அடுத்த போட்டியில் வெல்வதற்காக இந்திய அணி மும்முரமான தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறது.

- Advertisement -

பவுலிங் யூனிட்டில் மாற்றம்

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் கட்டாயம் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. குறைந்தபட்சம் சர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜடேஜா நீக்கப்பட்டு நிதீஷ் குமார் ரெட்டி விளையாடவும் வாய்ப்புகள் இருக்கிறது

இந்திய அணியின் பயிற்சி முகாமில் முதல் இரண்டு நாட்களில் பங்கு பெறாத பும்ரா நேற்று கலந்து கொண்டது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. இத்துடன் அணியில் எந்த வீரர்களும் காயம் இல்லாமல் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்கள் என்ற செய்தியும் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

திடீரென இணைந்த வீரர்

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் பஞ்சாப் மாநில சுழல் பந்துவீச்சாளர் ஹர்பரித் பிரார் திடீரென இந்திய பயிற்சி முகாமில் இணைந்து பந்து வீசினார். கேப்டன் கில் கேட்டுக் கொண்டதற்காக அவர் இந்திய அணி உடன் இணைந்து இருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் ககில் பஞ்சாப் மாநில வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு எதிரான டி20.. ஸ்மிருதி மந்தானா சாதனை.. மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற டாப் 5 வெற்றி

இதுகுறித்து ஹர்பரித் பிரார் போடும்பொழுது “என் மனைவியுடைய ஊர் பர்மிங்காம்தான். ஒரு மணி நேர பயணத்தில்தான் இந்த மைதானம் இருக்கிறது. கில் உடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர் பயிற்சிக்கு வருமாறு அழைத்தார். எனவே இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி செய்வதற்காக நான் வந்தேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -