இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என செய்திகள் தெரிவிக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் கால் பாதத்தில் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் நடக்க முடியாத அளவுக்கு சிரமப்பட்டார். மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடவில்லை.
அடுத்த இரண்டு தொடர்கள்
இந்திய அணி அடுத்து செப்டம்பர் 9 முதல் 28ஆம் தேதி வரையில் யுனைடெட் அரபு எம்ரீரில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரிலும், அக்டோபர் இரண்டு முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரையில் சொந்த மண்ணில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது.
இந்த நிலையில் கால் பாதத்தில் காயமடைந்து இருக்கும் ஒரு ரிஷப் பண்ட் இந்த இரண்டு தொடர்களிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவருக்கு அறுவை சிகிச்சைகள் எதுவும் தேவைப்படாது எனவும் கூறப்பட்டிருப்பது சற்று மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை முன்னோட்டம்
அடுத்த ஆண்டு 2026 இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த முறை ஆசிய கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்திய டி20 அணியில் மற்ற வடிவங்களை விட பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. சுப்மன் கில், ஜெய்ஸ்வால் மீண்டும் உள்ளே வர இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரன் அடிக்கலன்னு.. சாய் சுதர்சனை நீக்காதீங்க.. இந்த பிரமாதமான விஷயத்தை நான் அவர்கிட்ட கவனிச்சேன் – இந்திய முன்னாள் வீரர்
இப்படியான நிலையில் ரிஷப் பண்ட் ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாமல் போவது அவருக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும் என்று பேசப்படுகிறது. ஏற்கனவே அவருடைய வெள்ளைப் பந்து கிரிக்கெட் புள்ளி விபரங்கள் பாதகமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.






