இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி இறுதியில் டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் குறித்து முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தோல்வியின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை டிராவில் முடித்தது. சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அதே சூழ்நிலையில் இந்த தொடரில் இளம் வீரர் சாய் சுதர்சன் ஓரளவு தனது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெற்ற அவர், பெரிய அளவில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இருப்பினும் அரை சதம் அடித்து மொத்தமாக இந்த தொடரில் 141 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா இந்த இளம் வீரரிடம் சுறுசுறுப்பும் ஆக்ரோஷமும் தெரிகிறது. எனவே இவரது விஷயத்தில் அவசரப்படாமல் பொறுமையாக கையாள வேண்டும் என சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “மூன்றாவது இடத்தில் நீங்கள் களமிறங்க விரும்பும் பேட்ஸ்மேன் யார்? அவர் மனதளவில் வலிமையானவர் மற்றும் திறமையான வீரராக இருக்கிறார். அவரின் அந்த இரண்டு பண்புகளையும் நமக்கு காட்டினார். மேலும் அந்த வழியில் அவர் விளையாட முடியும். க்ரீசில் நீண்ட நேரம் அவரால் செலவிட முடியும். மேலும் பந்தின் பளபளப்பை அவரால் அகற்ற முடியும். ஆனால் அவரால் ரன்கள் எடுக்க முடியவில்லை. எனவே அந்த இடத்தில் அவர் கடுமையாக உழைக்க வேண்டும்.
இதையும் படிங்க:ஓய்வா? எனக்கா? துலீப் கோப்பைக்கு கேப்டனாக திரும்பிய சுப்மன் கில்.. பல முன்னணி வீரர்களும் திரும்பினர்.. விவரம்
பெரிய ஸ்கோர்களாக மாற்ற வேண்டும். அவர் மீது நீங்கள் நம்பிக்கை காட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் திறமையாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கிறார். மேலும் மூன்றாம் வீரருக்கு நீங்கள் சிறிது சலுகை கொடுக்க விரும்புவீர்கள். ஏனென்றால் செனா நாடுகளில் தொடக்க ஆட்டக்காரர்கள் நான் கடினமான சூழ்நிலையை கொண்டிருப்பார்கள். அதேபோல மூன்றாம் வரிசை வீரரும் இதே மாதிரியான ஒரு கடினமான சூழ்நிலையை பெற்றிருப்பார்” என்று அவர் பேசியிருக்கிறார்.






