டிராவிட் கோச்சா மனுசனா அருமையானவரு.. ஆனா கம்பீர் அதுல ஒன் சைடுதான் – ரிஷப் பண்ட் ஓபன் பேச்சு

0
67
Rishabh

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தற்போதைய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருவருக்கும் இடையேயான வேறுபாடு குறித்து இந்திய வீரர் ரிஷப் பண்ட் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இன்று துவங்கியுள்ள துலீப் டிராபியில் ரிஷப் பண்ட் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பி அணிக்கு விளையாடுகிறார். மேலும் இன்றைய போட்டியில் அவர் ஏழு ரன்கள் எடுத்த நிலையில் இந்திய ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் அபாரமான கேட்ச் மூலம் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில்

ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கிய காரணத்தினால் ஒரு வருடத்திற்கு மேலாக இந்திய அணியை விட்டு வெளியில இருந்தார். பிறகு இந்த வருடம் ஐபிஎல் தொடரில் வந்து இணைந்த அவர், டி20 உலகக் கோப்பை இந்திய அணி மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

இந்த நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு உள்நாட்டு டெஸ்ட் தொடரில் சிவப்பு பந்து வடிவத்திற்கு மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். அவருடைய உடல் தகுதியை சோதிக்க இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மேற்கொண்டு பத்து சர்வதேச டெஸ்ட் போட்டிகள் இருப்பதால் அவருக்கு இந்த தொடர் மிக முக்கியமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

ராகுல் டிராவிட் – கவுதம் கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பை தொடரை வென்று பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பதவிக்காலம் முடிய விலகினார். இதைத்தொடர்ந்து புதிய பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வந்திருக்கிறார். இருவரும் எப்படியானவர்கள் என்பது குறித்து ரிஷப் பண்ட் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து ரிஷப் பண்ட் கூறும்போது “டிராவிட் பாய் ஒரு மனிதராகவும் பயிற்சியாளராகவும் சமநிலையானவர் என்று நான் உணர்கிறேன். அது நல்லதும் கெட்டதுமாக இருக்கலாம், அதில் பாசிட்டிவ் நெகட்டிவ் இருக்கலாம்.மேலும் அவருடைய பயிற்சி என்பது தனி நபர் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பற்றியது.

இதையும் படிங்க : 164 ரன்னில் ஸ்ரேயாஸ் அணியை மடக்கியும்.. சிக்கலில் மாட்டிய ருதுராஜ் அணி.. சாய் சுதர்சன் ஏமாற்றம்.. 2024 துலீப் டிராபி

இதற்கு அப்படியே கம்பீர் பாய் நேர் எதிரானவர். அவர் மிகவும் ஆக்ரோஷமானவர்.நீங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் ஒன் சைடாகத்தான் யோசிப்பார். ஆனால் நீங்கள் ஒரு சமநிலையை கண்டுபிடித்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்

- Advertisement -