சஞ்சு சாம்சன் உடன் எனக்கு பிரச்சனையா.. நாங்க பேசறது இல்லையா?.. மவுனம் கலைத்த ரிஷப் பண்ட்

0
1386
Rishabh

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பண்ட்டை மூன்றாவது இடத்தில் பேட்டிங் வரிசையில் களம் இறக்கி வெற்றிகரமான ஒரு புதிய முயற்சி செய்திருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் தனக்கும் சக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இடையேயான நட்பு பற்றி பேசி இருக்கிறார்.

நடந்து முடிந்த 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இருந்து 13 போட்டிகளில், 40 ரன் ஆவரேஜில், 155 ஸ்ட்ரைக் ரேட்டில், 446 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதைப் போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இருந்து சஞ்சு சாம்சன் 16 போட்டிகளில், 153 ஸ்ட்ரைக் ரேட்டில் 531 ரன்கள் குவித்தார். அவர் தனது ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக 500 ரன்கள் தாண்டி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதன் காரணமாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்த இருவருமே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். பயிற்சி போட்டியில் துவக்க ஆட்டக்காரராக கிடைத்த வாய்ப்பில் சஞ்சு சாம்சன் கோட்டை விட்டார். ஆனால் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் கிடைத்த வாய்ப்பில் அரை சதம் அடித்து நிரூபித்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் கீப்பராக களம் இறங்கினார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் இந்திய அணியில் இவர்களுக்கு இருவருக்கும் இடையே நல்ல நட்பு இல்லை என்ற வதந்தி சமூக வலைதளத்தில் வந்தது.

இதையும் படிங்க : IND vs PAK.. அச்சுறுத்தும் மழை.. நாளை போட்டி நடக்குமா?.. வானிலை அறிக்கை.. முழு விவரங்கள்

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ரிஷப் பண்ட் கூறும்போது “எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. சஞ்சு எப்பொழுதும் நிதானமாகவும் ரிலாக்ஸ் ஆகவும் இருப்பார். இங்கு சமூக வலைதளத்தில் சில விஷயங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் இப்படியான விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்துவது கிடையாது. நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதை உடன் நட்பைக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -