ரோகித்துக்கு அடுத்து டெஸ்ட் கேப்டன் இவர்தான் வரணும்.. இவருக்கு மட்டுமே தகுதி இருக்கு – முகமது கைஃப் கருத்து

0
267
Kaif

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மாவுக்கு அடுத்து யாரை கேப்டனாக கொண்டு வர வேண்டுமென இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

தற்போது சொந்த மண்ணில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த காரணத்தினால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பதவி ஊசலாட்டத்தில் இருக்கிறது. மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக அடுத்து யார் வருவார்கள்? என்பது குறித்து சரியான அறிகுறிகளும் தென்படவில்லை.

- Advertisement -

துணை கேப்டன் விவகாரத்தில் முரண்பாடுகள்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு துணை கேப்டன் நியமிக்கப்படவில்லை. அதே சமயத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கும் அவரே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரோகித் சர்மாவுக்கு அடுத்து பும்ராவை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விரும்பவில்லை. அவருக்கு நிறைய ஓய்வு கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் வேறொரு வீரரை கேப்டனாக கொண்டுவர நினைக்கிறது. இந்த வகையில் சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இவருக்கு மட்டுமே தகுதி இருக்கிறது

இது குறித்து முகமது கைஃப் கூறும் பொழுது ” ரோஹித் சர்மாவுக்கு அடுத்தது தற்போதைய இந்திய அணியில் டெஸ்ட் கேப்டனாக பரிசளிப்பதற்கு ரிஷப பந்த் மட்டுமே இருக்கிறார். அவர் அதற்கு தகுதியானவர். அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வந்தாலும் மேட்ச் வின்னிங் நாக் விளையாட தயாராக இருக்கிறார். அவர் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என எல்லா நாடுகளிலும் சிறப்பாக இருக்கக்கூடியவர். அவர் டர்னிங் டிராக்குகளில் கூட முழுமையான பேட்ஸ்மேன்”

இதையும் படிங்க : ரோகித் அது நடக்கலன்னா ரிட்டையர்டு ஆயிடுவார்.. தோத்தாலும் இதுக்காக பாராட்டறேன் – ஸ்ரீகாந்த் ஓபன் பேச்சு

“ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் பொழுது ஒரு ஜாம்பவான் வீரராக ஓய்வு பெறுவார். மேலும் அவர் விக்கெட் கீப்பிங்கிலும் இப்பொழுது நிறைய முன்னேறி வந்திருக்கிறார். அவர் கிரீசில் இருக்கும் வரை நியூசிலாந்து எளிதாக மூச்சு விட முடியவில்லை. தற்போது நீங்கள் டெஸ்ட் அனுப்பி ஒரு புதிய கேப்டனை தேடுவீர்கள் என்றால், ரோகித் சர்மாவின் வாரிசாக ரிஷப் பண்ட் மட்டுமே தகுதியானவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -