தோனி வழியில் ரோகித் மாஸ் மூவ்.. ரிஷப் பண்ட் அதிரடி பேட்டிங்.. டி20 உ.கோ பயிற்சி போட்டி

0
891
Rishabh

நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இன்று தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா முக்கியமான ஒரு மாற்றத்தை செய்ய ரிஷப் பண்ட் பேட்டிங்கில் கலக்கியிருக்கிறார்.

இன்றைய பயிற்சி போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆச்சரியப்படுத்தும் முடிவாக ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தார்கள். சஞ்சு சாம்சன் ஏமாற்றம் அளிக்கும் விதமாக 6 பதில் 1 ரன் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அருமையான முடிவாக ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். முதலில் இரண்டு ஓவர்களுக்கு பொறுமை காட்டிய ரிஷப் பண்ட் அடுத்து பவர் பிளேவின் கடைசி ஓவரில் அதிரடியில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டார்.

தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 32 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்து அடுத்தவர்கள் விளையாடுவதற்காக வழிவிட்டு வெளியேறினார். இன்றைய போட்டியில் டி20 கிரிக்கெட்டுக்கு எந்த மாதிரியான மாடன் கிரிக்கெட் ஷாட்கள் விளையாட வேண்டுமோ அதை எல்லாம் கச்சிதமாக செய்தார்.

- Advertisement -

பொதுவாகவே தற்போது டி20 கிரிக்கெட்டில் பகுதி நேர ஆப் ஸ்பின்னர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அஸ்வின் போல ஸ்பெஷலிஸ்ட் யாரும் இல்லை. ஜடேஜா மற்றும் சாகல் போல இடது கை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதை உணர்ந்து தோனி சிஎஸ்கே அணியில் ஆரம்பத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் இடது கை சுழல் பந்துவீச்சாளர்களை விளையாட இடது கை பேட்ஸ்மேன் ரெய்னாவை வைத்திருந்தார். பின்பு அந்த இடத்திற்கு கச்சிதமாக மொயின் அலியையும் கொண்டு வந்திருந்தார்.

இதையும் படிங்க : பாகிஸ்தானை ஜெயிக்கிறது இருக்கட்டும்.. 2022ல செஞ்ச அந்த தப்ப செய்யாம இருங்க – கங்குலி அறிவுரை

இன்று இதே முறையில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்திற்கு ரிஷப் பண்ட்டை கொண்டு வந்தது சரியான முடிவாக அமைந்தது. பொதுவாகவே ஃபீல்டர்கள் உள்ளே இருந்தால் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடுவார். மேலும் அவர் இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களை எந்த நேரத்திலும் சிறப்பாக விளையாடுவார். ஒருவேளை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக வந்தால், ரிஷப் பண்ட் மூன்றாவது வீரராகவும் களமிறங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -