ஐபிஎல் கிரிகெட் தொடர் இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதில் இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட் குறித்தும் ஐபிஎல் குறித்தும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
லக்னோ அணியின் கேப்டன்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆக திகழும் ரிசப் பண்ட் சமீபத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணி அவரை 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டன் ஆகவும் பொறுப்பேற்று அணியை வழிநடத்த இருக்கிறார். ஏற்கனவே டெல்லி அணியை சிறப்பாக வழி நடத்திய நிலையில் தற்போது லக்னோ அணிக்கு அவர் கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பண்ட், இளைஞர்கள் இந்திய அணிக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர் எனவும், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் எனவும், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று கடினமாக உழைத்தால் மற்ற அனைத்தும் தானாக நிறைவேறும் என்று சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஐபிஎல்-லை விட இது முக்கியம்
இதுகுறித்து பண்ட் விரிவாக கூறும்போது ” சிறுவயதில் இருந்து எனக்கு ஒரு கனவு இருந்தது, அதை இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் ஐபிஎல் குறித்து நான் ஒருபோதும் யோசித்ததில்லை. நிச்சயமாக இது ஒரு சிறந்த தளம் தான், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதே உங்களின் முதல் இலக்காக இருக்க வேண்டும். அதற்காக உழைத்தால் ஐபிஎல் போன்ற விஷயங்கள் தானாக நடைபெறும்.
இதையும் படிங்க:எனக்கு அடிபட்டதும் ரெய்னாதான் வந்தார்.. என் அம்மா அவர் செஞ்சத பார்த்து இதைத்தான் சொன்னாங்க – அஸ்வின் உணர்ச்சிப் பேட்டி
அந்த அளவிற்கு பெரிய மனநிலை இருந்து உழைத்தால் வெற்றி நிச்சியமாக தொடரும். நான் இந்தியாவுக்காக ஒரு நாள் விளையாடுவேன் என்று நினைத்து அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன். எனது நம்பிக்கை வீண் போகாமல் அதற்கு கடவுள் எனக்கு கருணை காட்டினார். 18 வயதில் எனக்கு இந்திய அணியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று ரிஷப் பண்ட் கூறி இருக்கிறார்.