என்னை வழிநடத்துவது இந்திய வீரர் கிடையாது.. ரொம்ப வருஷமா அந்த ஆஸ்திரேலிய வீரர்தான் – ரிஷப் பண்ட் பேச்சு

0
565
Rishabh

தற்பொழுது வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டு வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். இதில் பல விஷயங்கள் குறித்து இதை அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையும் என பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வந்தார்கள். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிக முக்கியமான இரண்டு மாற்றங்களை செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

- Advertisement -

மிகக் குறிப்பாக ரோஹித் சர்மா இடதுகை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை மூன்றாவது வீரராக பேட்டிங் வரிசையில் கொண்டு வந்தார். மேலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கின்ற காரணத்தினால், சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரையும் அணியில் வைத்து பேட்டிங் வரிசையை 8 வரையில் நீட்டித்துக் கொண்டார். இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ரிஷப் பண்ட் கூறும்போது “நாங்கள் இங்கு ஒரு அணியாக சுழல் பந்துவீச்சு பெரிய அளவில் பங்கை கொண்டிருக்கும் என்று பேசினோம். மேலும் ரோகித் பாய்க்கு இங்கு கூடுதலாக ஒரு சுழல் பந்துவீச்சாளர் கிடைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நாங்கள் ஒவ்வொரு போட்டியாகவே எடுத்துக் கொள்கிறோம். மொத்தமாக எதையும் சிந்திப்பதில்லை. குறிப்பிட்ட நாளில் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சிறந்ததை வழங்க முயற்சி செய்கிறோம்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் எனக்கு எப்பொழுதும் ஆதரவாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். எனக்கு யோசனை இருந்தால், அது குறித்து நான் விவாதிக்க விரும்பினால், அவரிடம் விவாதிக்க முடியும்.இந்த ஆண்டு மட்டும் கிடையாது சில காலமாக அவர் தொடர்ந்து எனக்கு இருந்து வருகிறார். அவர் போன்ற ஒரு சிறந்தவரை உங்கள் பக்கத்தில் வைத்திருப்பது நல்லது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. சூப்பர்-8 சுற்று இந்தியாவுக்கு அடித்த லக்.. அரையிறுதி கன்பார்ம் போல

அவர் தன்னுடைய நுண்ணறிவுகளை எனக்கு வழங்குகிறார். அதே சமயத்தில் இறுதியாக என்னுடைய முடிவை எடுக்க என்னை அனுமதிப்பார். நீங்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை என்றால் உங்கள் செயல்திறன் குறித்து நம்பிக்கை உங்களுக்கு வராது. நான் தவறாக போனால் என்னை திருத்துவதற்கு ரிக்கி பாண்டிங் எப்பொழுதும் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -