நடப்பு 9வது டி20 உலகக்கோப்பைத் தொடர் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிறைய சுவாரசியங்களை முதல் சுற்றிலேயே கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சுற்றுக்கு முன்பான சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு சில சாதகமான நிலைமைகள் திடீரென உருவாகி இருக்கிறது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு ஆரம்பத்திலேயே ரேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உதாரணமாக ஏ பிரிவில் இந்திய அணிக்கு முதல் இடம், பாகிஸ்தான் அணிக்கு இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதே போல சூப்பர் 8 சுற்றுக்கு, ஏ பிரிவில் முதல் அணி, பி பிரிவில் இரண்டாவது அணி, சி பிரிவில் முதல் அணி, டி பிரிவில் இரண்டாவது அணி ஆகியவை ஒரே குழுவில் வரும். மற்ற நான்கு அணிகள் இன்னொரு குழுவில் வரும். ஒவ்வொரு குழுவில் உள்ள நான்கு அணிகளும் தங்கள் குழுவில் இருக்கும் மற்ற அணி உடன் ஒரு போட்டியில் மோதும். முடிவில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
தற்போது ஏ பிரிவில் முதல் அணியாக இந்தியா ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதே போல பி பிரிவில் இரண்டாவது அணியாக ஆஸ்திரேலிய ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தற்பொழுது இவர்கள் இருவரும் சூப்பர் 8 சுற்றில் ஒரே பிரிவில் இடம் பெறுவார்கள். மேலும் இந்த இரண்டு அணிகளும் ஒரே பிரிவில் இருப்பதால் இந்தச் சுற்றில் எதிர்த்து விளையாடும்.
மேலும் சி பிரிவில் முதல் அணியாக நியூசிலாந்து இருக்கிறது. ஆனால் நியூசிலாந்து தகுதி பெற வாய்ப்பு 99% கிடையாது. எனவே ஆப்கானிஸ்தான் அணிதான் தகுதி பெறும். எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்த முதலிடம் கிடைக்கும். இதே பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எல்லா போட்டிகளையும் வென்றாலும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட இரண்டாம் இடம்தான் கிடைக்கும். எனவே சி பிரிவில் முதல் அணியான ஆப்கானிஸ்தான் அணி இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இருக்கும் குழுவுக்கு வரும்.
இதையும் படிங்க : ஐபிஎல்ல சும்மா வச்சிருந்தாங்க.. அங்கதான் ரெடி ஆனேன்.. நைட்டுக்கு கோழிக்கறி – ஹீரோ ரூதர்போர்டு பேச்சு
இதே போல டி பிரிவில் முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா இருக்கிறது. எனவே இந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா குழுவுக்கு வராது. இந்த குழுவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிதான் இந்தியா ஆஸ்திரேலியா இருக்கும் குழுவுக்கு வரும். எனவே இந்தக் குழுவில் இரண்டாவது இடத்தை பங்களாதேஷ் இல்லை நெதர்லாந்து பிடிக்கும். இந்தக் காரணத்தினால் சூப்பர் 8 சுற்றில் ஒரு பிரிவில் இந்தியா ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இல்லை நெதர்லாந்து அணிகள் இடம் பெறவே அதிக வாய்ப்புகள் உண்டு. இரண்டு சிறிய அணிகள் வருவதால், இந்திய ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.