இந்திய கிரிக்கெட்

நான் தப்பா செய்யல.. மகி பாய் செஞ்சதையே செய்றேன்.. அவசியம் இருக்குங்க – ரிஷப் பண்ட் விளக்கம்

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தான் ஏன் ரிஸ்க் எடுத்து ஷாட் விளையாடுகிறேன் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

பொதுவாகவே ரிஷப் பண்ட் ஷாட் செலக்சன் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அவர் சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் எப்பொழுதும் பெரிய ஷாட் விளையாடுவதை நோக்கமாக வைத்திருக்கிறார். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடிந்த அவரால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சரிவர நிலைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகி பாய் செய்திருக்கிறார்

இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “எனக்கு முன்பாகவே சில லேப் ஷாட் விளையாடி இருக்கிறார்கள். நான் மகி பாயின் பழைய வீடியோக்களை நிறைய பார்த்திருக்கிறேன். அவரும் இது போலான லேப் ஷாட் விளையாடி இருக்கிறார். ஆனால் சதவீதம் வாரியாக எடுத்துக் கொண்டால் எனக்கு முன்பாக இருந்தவர்கள் எல்லோருமே குறைவாகவே இப்படியான முறையில் விளையாடி இருக்கிறார்கள்”

“தற்போது கிரிக்கெட் மாறி வருகிறது. ஃபீல்டு பிளேஸ்மென்ட் நிறைய மாறிவிட்டது. மேலும் வீரர்களும் மாறி அமைந்து கொண்டு வருகிறார்கள். எனவே இப்படியான ஷாட் தங்களின் விளையாட்டுக்கு அவசியம் என சில வீரர்கள் நினைக்கலாம். மற்றவர்கள் இதை செய்யாமலும் இருக்கலாம். நாள் முடிவில் ஆட்டத்தை நீங்கள் எப்படி ரீட் செய்தீர்கள் அதற்கு எப்படி தகுந்தபடி விளையாடினார்கள் என்பது தான் முக்கியம்”

- Advertisement -

அவர் கோபமாக இருந்தார்

“நான் என்னுடைய சிறு வயது பயிற்சியாளர் தாரக் ஸார் உடன் சேர்ந்த போதிருந்து அவர் என் மீது கோபமாகவே இருந்தார். நான் தற்காப்பு முறையில் விளையாடுவதை கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார். நீங்கள் தற்காப்பு விளையாட்டில் தேர்ச்சி பெற்றால் மற்ற எல்லாவற்றையும் சரியாக செய்வீர்கள் என்று நம்பினார். ஏனென்றால் அதிரடியாக விளையாடுவது எனக்கு இயல்பாகவே இருக்கிறது என்றும், எனவே நான் பாதுகாப்பாக விளையாடுவதுதான் முக்கியம் என்றும் அவர் நினைத்தார்”

“நான் பேட்டிங் செய்யும்பொழுது அவர் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று பார்ப்பேன். அவர் பார்த்துக் கொண்டிருந்தால் நான் அவர் கூறியபடி பாதுகாப்பான முறையில் பேட்டிங் செய்வேன். அவருடைய பார்வை என்னை விட்டு விலகி விட்டால் நான் அதிரடியாக பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts