நான் எவ்வளவு கஷ்டப்படுறேனு அவங்களுக்கு தெரியும்.. இனிமே என் பேட்தான் பேசும் – ரிஷப் பண்ட் நெகிழ்வான பேச்சு

0
6
Rishabh

இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனியாக நின்று விளையாடி தனது அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் இனி தன்னுடைய பேட் பேசுவது சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

ரிஷப் பண்ட் வெள்ளை பந்து கிரிக்கெட் சில ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் பார்ம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் இந்த வருடம் மேல் வரிசையில் வந்து விளையாடுகிறார்.

- Advertisement -

தனி ஆளாக போராட்டம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய லக்னோ அணிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் கடைசி ஓவர் வரையில் நின்று விளையாடி 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய ரிஷப் பண்ட் கூறும்போது “கடைசி வரை போட்டியை நின்று முடிப்பது நல்ல ஒரு பலமான விஷயமாகும். அதே வேளையில் எங்களுடைய பவுலர்களை நிறைய பாராட்ட வேண்டும். இன்று மணிமாறன் சித்தார்த் அணிக்குள் வரும்போது அவர் சிறப்பாக செயல்படுவார் என்று தெரியும். அவர் அதை சரியாக களத்தில் செய்து காட்டினார்”

- Advertisement -

இனி என் பேட் பேசும்

“நாங்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள கூடியவர்களாகவே இருக்க விரும்புகிறோம். நம்மை சுற்றி விமர்சனங்கள் இருக்க வேண்டும். நாம் அதிலிருந்து நமக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு அடுத்த முன்னேறி செல்ல வேண்டும்”

இதையும் படிங்க : மீண்டும் சிஎஸ்கே தவறான முடிவு.. ருத்ராஜ் பிளமிங் பதவி விலக வேண்டும்.. ரசிகர்கள் எதிர்ப்பு – என்ன நடந்தது?

“நான் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கடினமாக உழைக்கிறேன் என்பது என்னுடைய அணியினருக்கும் நிர்வாகத்திற்கும் நன்றாக தெரியும். நான் நன்றாக தயாராகி 200 சதவீதம் முயற்சி செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். எனவே இனி நான் பேச விரும்பவில்லை. இனி என்னுடைய பேட் பேசட்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -