இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டிக்கு சிஎஸ்கே அணியில் இரண்டு முதல் மூன்று மாற்றங்கள் கட்டாயம் செய்யப்பட வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் டிஎஸ்கே ரசிகர்கள் கூறி வந்தார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஏன் மாற்றம் வேண்டும்?
சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அகேல் ஹுசைன் புதிய பந்தில் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக பந்து வீசக்கூடியவர். ஆர்சிபி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர் கட்டாயம் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போதைக்கு சிஎஸ்கே வின் பேட்டிங்கில் ஐந்தாவது இடத்திற்கு கீழே மிகவும் அனுபவம் மற்ற வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்களுடைய திறமையும் கொஞ்சம் குறைவாக உள்ளது போல் தெரிகிறது. எனவே பேட்டிங் வரிசையில் அதிரடி வீரர் உர்வில் படேல் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
பதவி விலக வேண்டும்
இந்த நிலையில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கடந்த போட்டியில் விளையாடிய அதே சிஎஸ்கே பிளேயிங் லெவன் விளையாடும் என கேப்டன் ருதுராஜ் அறிவித்திருக்கிறார். இது சிஎஸ்கே ரசிகர்களை பெரிய அளவில் கோபப்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : சாம்சன் ஆர்சிபியை விடமாட்டார்.. ஆனா விராட் கோலி உங்கள அந்த விஷயத்துல டயர்ட் ஆக்குவார் – இர்பான் பதான் கணிப்பு
இதன் காரணமாக சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் கேப்டன் பொறுப்பில் இருந்து ருதுராஜ் மற்றும் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளம்மிங் இருவரும் பதவி விலக வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.






