அடுத்த ஆண்டு 2015-ல் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது தற்பொழுது வரை இழுபறியாகவே இருந்து வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் அணி ஆல்ரவுண்டர் ஹசன் அலி முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் காரணங்களால் நேரடியான போட்டிகள் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வருகிறது. அதே சமயத்தில் இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மோதி வந்தன. மேலும் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் இங்கே வந்தது. ஆனால் இந்தியா அங்கு செல்ல மறுத்து வருகிறது.
மேலும் ஐசிசி இடம் இந்திய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் வைத்து நடத்துமாறு கேட்டு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் திட்டவட்டமாக எல்லா போட்டிகளுமே பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறி இருக்கிறது.
இப்படியான நிலையில் இலங்கையில் ஐசிசி வருடாந்திர கூட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் எப்படியாவது இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர் ஹசன் அலி இந்திய அணி வரவில்லை என்றால் தேவையில்லை என்று பரபரப்பான கருத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஹசன் அலி கூறும் பொழுது “நாங்கள் இந்தியா சென்று விளையாடினால் அவர்களும் பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் இன்று பலமுறை பலர் கூறி இருக்கிறார்கள் விளையாட்டில் இருந்து அரசியல் ஒதுங்கி இருக்க வேண்டிய நேரம் இது. மேலும் பல இந்திய வீரர்களும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்கள்.எனவேபாகிஸ்தானுக்கு இந்திய அணி வர விரும்பவில்லை என்பது அர்த்தம் கிடையாது.எனவே அவர்களது சொந்த கொள்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்க வேண்டும்.
இதையும் படிங்க : 256 ஸ்ட்ரைக் ரேட்.. முன்னாள் ஆர்சிபி வீரர் உதவி.. சிஎஸ்கேவின் டிஎஸ்கே தகுதி.. சான் பிரான்சிஸ்கோ அணி வெற்றி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஏற்கனவே கூறியது போல பாகிஸ்தான் சாம்பியன் டிராபியை நடத்துகிறது என்றால் மொத்த போட்டிகளும் பாகிஸ்தானில் நடக்கும். இந்தியா இங்கு வர விரும்பவில்லை என்றால், இந்தியா இல்லாமலே தொடர் நடக்கும். இந்தியா வரவில்லை என்றால் கிரிக்கெட் முடிந்து விட்டது என்று அர்த்தம் கிடையாது. இந்தியா இல்லாமலும் நிறைய அணிகள் இருக்கின்றன” என்று கூறி இருக்கிறார்.






