நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் கடைசி நேரத்தில் காயத்தால் திடீர் என விலகி இருக்கிறார். உடனடியாக அவருக்கு மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று ராஜ்கோட் மைதானத்தில் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 14 மற்றும் 18ஆம் தேதிகளில் அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.
நியூசிலாந்து தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மாற்று தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டார். அதே சமயத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் கூடுதலாக சேர்க்கப்பட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். மிடில் ஆர்டர் பேக் அப் பேட்ஸ்மேன் இடத்திற்கு ருதுராஜை இதனால் தேர்வு செய்யவில்லை.
இதன் காரணமாக இரண்டாவது விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் விளையாடவோ இல்லை அந்த இடத்திற்கு பேக்கப் பேட்ஸ்மேன் ஆகவோ தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் திடீரென பயிற்சியில் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் இடம் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் இது பின்னடைவாக அமைந்திருக்கிறது.
நேற்று ரிஷப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது அவருக்கு வயிற்றில் ஒரு பக்கத்தில் மிகுந்த வலி உருவாகி இருக்கிறது. அதை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த பொழுது ஒரு பக்க தசை நார்கிழிவு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் உடனடியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறிவிட்டார்.
இதையும் படிங்க: நான் இந்த இந்திய வீரரை தான் மிஸ் பண்றேன்.. அவர் ஏபி டிவில்லியர்ஸ் மாதிரி – ஆலன் டொனால்ட் பேட்டி
இந்த நிலையில் தற்போது அவருடைய இடத்திற்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரிஷப் பண்ட்டை தேர்வு செய்வதற்கு முன்பாக இவரையே தேர்வு செய்து வந்தார்கள். ஆனால் ரிஷப் பண்ட் மீண்டும் வெள்ளை பந்து அணிக்கு வந்த பொழுது இவரை நீக்கி இருந்தார்கள். தற்பொழுது மீண்டும் அவருக்கு இந்த வகையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.