கடைசி ஓவரில் ரபாடா வைத் தவிர்த்து டாம் டாம் கரனை பந்து வீச வைத்த காரணம் இதுதான் – ரிஷப் பண்ட் விளக்கம்

0
266
CSK vs DC Qualifier 1

சில நிமிடங்களுக்கு முன்பு முதல் குவாலிஃபயர் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 60 ரன்கள் குவித்தார். 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாட தொடங்கியது.

சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டுப்லஸ்ஸிஸ் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க, பின்னர் வந்த உத்தப்பா ருத்துராஜ் உடன் இணைந்து அற்புதமாக விளையாடினார். இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்த காரணத்தினால் சென்னை போட்டியை தன் பக்கம் இழுத்து கொண்டு சென்றது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் உத்தப்பா 63 ரன்களிலும் அதன் பின்னர் ருத்துராஜ் 70 ரன்களில் ஆட்டமிழக்க, போட்டி டெல்லி அணி பக்கம் சென்றது. கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்தது. இறுதியில் களமிறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி 6 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என தனது அதிரடி பினிஷிங் மூலம் சென்னை அணியை வெற்றி பெறச் செய்தார்.

கடைசி ஓவரை ரபாடாவுக்கு கொடுக்காத காரணம் என்ன

சென்னை அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கடைசி ஓவரை டாம் கரனுக்கு கொடுத்தார். ரபாடாவிற்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. கடைசி ஓவரை ரபாடா வீச போகிறார் என்று அனைவரும் நினைத்து கொண்டிருந்த நிலையில், ரிஷப் பண்ட் எடுத்த இந்த முடிவு மிகப்பெரிய கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழும்ப செய்துள்ளது.

அதற்கான காரணத்தை போட்டி முடிந்தவுடன் ரிஷப் பண்ட் தற்போது கூறியிருக்கிறார். இன்றைய போட்டியில் நல்ல விதத்தில் பந்துவீசிய வீரர் என்கிற அடிப்படையில் இறுதி ஓவரை அவருக்குக் கொடுத்தேன். முதல் மூன்று ஓவர்கள் அவர் சிறப்பாக தான் வீசினார், கடைசி ஓவரில் இப்படி நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. தவறுகள் நடைபெறுவது சகஜம் தான். இந்த தவறுகளை இனி நாங்கள் திருத்திக் கொண்டு இதிலிருந்து மீண்டு வருவோம்.

- Advertisement -

தற்பொழுது என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் அடுத்த ரன்கள் வெற்றி பெற போதும் என்று நினைத்தோம். ஆனால் அது தவறான கணிப்பாகி விட்டது. முக்கியமான நேரத்தில் அவர்களது விக்கெட்டுகளை நாங்கள் கைப்பற்ற தவறிவிட்டோம். ஒரு கிரிக்கெட் வீரராக இன்று நடந்த அனைத்து தவறுகளையும் புரிந்து, அவை அனைத்தையும் திருத்திக் கொண்டு அடுத்த போட்டிக்கு நகர்ந்து செல்ல நினைக்கிறேன். இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என நம்புகிறேன் என்றும் ரிஷப் பண்ட் இறுதியில் நம்பிக்கை தெரிவித்தார்.