இந்திய கிரிக்கெட்

என் திறமையை நிரூபிக்க பெரிய வாய்ப்புகள் கொடுக்கவே இல்லை.. ஆனா நான் இந்த முடிவுல இருக்கேன் – ரிஷப் பண்ட் வெளிப்படை

​இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான தேர்வில் கே.எல். ராகுல், இஷான் கிஷன் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோரின் வருகையால் வாய்ப்பை இழந்துள்ள ரிஷப் பண்ட், மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து பேசியுள்ளார்.

- Advertisement -

​கடந்த 2022-ல் இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த பிறகு ரிஷப் பண்ட் இந்திய ஒருநாள் அணியில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். கார் விபத்துக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுத்த போதிலும், ஒருநாள் போட்டிகளில் அவருக்கான இடம் கேள்விகுறியாகவே உள்ளது.

​இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “நிச்சயமாக இதுபோன்று நடக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு அட்லீட்டின் மைண்ட்செட் என்பது ஒரு பின்னடைவு ஏற்படும் போது, அதைத் தொடர்ந்து எப்போதும் ஒரு கம்பேக் இருக்கும் என்பதை உணர வைக்கும். விளையாட்டு வீரராக தினமும் நீங்கள் இதை எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “எனக்கு அது நடந்தது, இது நடந்தது என்று மனிதர்கள் சொல்வார்கள், ஆனால் ஒரு அட்லீட்டுக்கு இது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். அதே நேரத்தில், நீங்கள் எவ்வளவு ஹார்ட் வொர்க் செய்கிறீர்கள் என்பதும், இந்த லெவலை பராமரிக்க எந்த பாதையில் செல்கிறீர்கள் என்பதும் உங்களுக்கு தெளிவாகத் தெரியும். இதை தினமும் சாத்தியப்படுத்த உங்கள் மைண்டில் டிசிப்ளினான ஒரு வாய்ஸ் கேட்டுக்கொண்டே இருக்கும். எப்போதும் எளிதாக ஒப்பினியன் சொல்லிவிடலாம், ஆனால் மக்கள் விஷயங்கள் நடக்கும் வரை வெயிட் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் பேசிய அவர் “நான் எனது பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்த எனக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று உணர்கிறேன். ஆனால், அதே நேரத்தில் இன்டர்நேஷனல் கிரிக்கெட் மாறிக்கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் வாய்ப்பிற்காக வெயிட் செய்து, விஷயங்களைச் சாத்தியப்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts