கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

விராட் கோலி இந்த ரெண்டு விஷயத்துல காம்ப்ரமைஸ் ஆக மாட்டார்.. இவங்களால டீம்ல இது நடக்குது – இந்திய ஸ்பின் கோச் பேச்சு

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியின் அபாரமான ஆட்டம் மற்றும் அவரது அர்ப்பணிப்பு குறித்து இந்திய அணியின் ஸ்பின் பௌலிங் கோச் சாய்ராஜ் பகுதுலே பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

​திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 88 பால்களில் 139 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்களை அதிவேகமாக கடந்த இரண்டாவது பேட்டர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

​விராட் கோலியின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து சாய்ராஜ் பகுதுலே பேசும்போது “அவர் ஒவ்வொரு சீரிஸ் மற்றும் ஒவ்வொரு மேட்சிலும் மேன்மையடைந்து கொண்டே போகிறார். இவ்வளவு சாதனைகளை அச்சீவ் செய்த பிறகும், மேலும் இம்ப்ரூவ் செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பது ஃபேபுலஸ். ரோஹித் சர்மாவும் டீமில் இருப்பதால், இவர்கள் இருவரின் எக்ஸ்பீரியன்ஸ் இளம் பிளேயர்களுக்கு மிகவும் ஹெல்ப்ஃபுல்லாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “இளம் பிளேயர்கள் இவர்களுடைய எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் உரையாடல்கள் மூலம் தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். இவர்களின் பிரசன்ஸ் நிச்சயமாக இளம் வீரர்களுக்கு உதவும். விராட் கோலி எப்போதும் தனது கேம் மற்றும் ஃபிட்னஸ் லெவலில் கான்ஸ்டன்ட்டாக வொர்க் செய்து வருகிறார். இது டிரெஸ்ஸிங் ரூமில் உள்ள பிளேயர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் உள்ள பல பிளேயர்களுக்கு இன்ஸ்பைரிங்காக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் உலகக்கோப்பை தயாரிப்பு குறித்து பேசிய அவர் “தென்னாப்பிரிக்காவில் உள்ள பிட்ச்களை போலவே நம்மால் இங்கு ரெப்ளிகேட் செய்ய முடியாது. ஆனால் திருவனந்தபுரம் பிட்ச்சில் நல்ல பவுன்ஸ் இருந்தது. அதேபோல தென்னாப்பிரிக்காவிலும் நல்ல பவுன்ஸ் இருக்கும் என்பதால், அதற்கு ஏற்றவாறு டீம் நிர்வாகம் பிளான் செய்து வருகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts