ரிஷப் பண்ட் ஏலத்துக்கு வந்தது பணத்துக்காகத்தான்.. எங்களுக்கு நடுவுல இதுவே நடந்தது – டெல்லி கோச் ஹேமங் பதானி பேட்டி

0
226
Rishabh

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை விட்டு ரிஷப் பண்ட் வெளியே வந்ததற்கு காரணம் பணம்தான் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் முன்னாள் தமிழக வீரர் ஹேமந்த் பதானி கூறி இருக்கிறார்.

இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு வந்த ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதுவே இதுவரையிலான ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரர் வாங்கப்பட்ட மிக அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரிஷப் பண்ட் தந்திருந்த விளக்கம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பிங் கேப்டனாக இருந்து வந்த ரிஷப் பண்ட் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அந்த அணியை விட்டு வெளியேறி மெகா ஐபிஎல் ஏலத்திற்கு வந்தார். இதன்பிறகு அவர் ஐபிஎல் ஏல வரலாற்றில் எப்பொழுதும் இருந்திராத வகையில் 27 கோடி ரூபாய்க்கு மிக அதிகபட்ச தொகைக்கு லக்னோ அணியால் வாங்கவும் பட்டார்.

இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த ரிஷப் பண்ட் தான் பணத்திற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை விட்டு வெளியே வரவில்லை எனவும், பணம் தன்னுடைய முக்கிய நோக்கமாக இருக்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் இந்த வருடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் ஹேமங் பதானி ரிஷப் பண்ட் அணியை விட்டு வெளியேற காரணம் பணம்தான் என அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

எங்களுக்கு இடையில் நடந்தது இதுவே

இது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறும் பொழுது “ரிஷப் பண்ட் டெல்லி அணிகள் தங்க விரும்பவில்லை. அவர் ஏலத்திற்கு செல்லவே விரும்பினார். ஒரு வீரரை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றால் இரு தரப்பு சம்மதமும் தேவைப்படுகிறது. பயிற்சியாளர் குழுவில் இருந்து நாங்கள் அவரிடமும் பேசினோம் அணி நிர்வாகத்திடமும் பேசினோம். எங்களுக்கு இடையே தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ் இருந்தது”

இதையும் படிங்க: நான் சிராஜை பாராட்டினேன்.. ஆனா அவர் திட்றாரு.. நிஜமா நடந்தது இதுதான் – ஹெட் பேட்டி

“ரிஷப் பண்ட் எங்களிடம் ஏலத்திற்கு சென்று தன்னுடைய சந்தை மதிப்பை சோதிக்க விரும்புவதாக தெரிவித்தார். அதிக சம்பளத்தை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் உணர்ந்தார். ஒரு அணியில் தக்க வைக்கப்பட்டால் அதிகபட்சமாக 18 கோடிதான் கிடைக்கும். நாள் முடிவில் அவர் அதைவிட அதிக மதிப்புடையவர் என்று உணர்ந்தார். அவருக்கு இறுதியாக 27 கோடி கிடைத்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -