ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ரிஷப் பண்டின் பங்கு முக்கியமானதாக இருந்தது. மேலும் அவர் ஒரு புதிய உலகச் சாதனையை உலகக் கோப்பை வரலாற்றில் படைத்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக வந்த கேப்டன் ரோகித் சர்மா 2.5 ஓவரில் இந்திய அணி 11 ரன்கள் எடுத்த பொழுது ஆட்டம் இழந்தார். அடுத்த மூன்று ஓவரில் பவர் பிளேவில் ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாய நெருக்கடி விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்க்கு உருவானது.
ரிஷப் பண்ட் பவர் பிளேவில் அங்கிருந்து 11 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இவருடைய அதிரடி பேட்டிங் காரணமாக பவர் பிளேவில் இந்திய அணி கௌரவமாக ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. இதனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் நெருக்கடி இல்லாமல் விளையாட முடிந்தது.
மேலும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் மெதுவான ஆடுகளத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டார். நேற்று விக்கெட் கீப்பராக அவர் மொத்தம் மூன்று கேட்ச் பிடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார்.
ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் :
10- ரிஷப் பண்ட் (2024)*
9- ஆடம் கில்கிறிஸ்ட் (2007)
9 – மேத்யூ வேட் (2021)
9- ஜோஸ் பட்லர் (2022)
9 – ஸ்காட் எட்வர்ட்ஸ் (2022)
9- தசுன் ஷனகா (2022)
இதையும் படிங்க : விராட் கோலியின் ஆதிக்கத்தை முடித்து சூரியகுமார் உலகசாதனை.. ஆப்கான் செய்த வினோத ரெக்கார்ட்
மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் கொண்டு வந்தது நல்ல தாக்கத்தை கொடுத்து வருகிறது. முதல் விக்கெட் சீக்கிரத்தில் விழுந்தாலும் கூட, ரிஷப் பண்ட் தன்னுடைய பாணியில் அதிரடியாக விளையாடி, போட்டியில் இருக்கும் அழுத்தத்தை எடுத்து எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாட உதவியாக இருந்து வருகிறார்!