இந்திய கிரிக்கெட்

147 வருடம்.. வெறும் 13 இன்னிங்ஸ்.. ஆஸி மண்ணில் ரிஷப் பண்ட் புது சரித்திரம்.. மாஸ் ரெக்கார்டு

ஆஸ்திரேலியா மண்ணில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் பும்ரா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சீட்டுக்கட்டாக சரிந்த இந்திய பேட்டிங் யூனிட்

இன்று முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் மூன்றாவது இடத்தில் வந்த தேவ்தத் படிக்கல் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து விராட் கோலி 5, கேஎல்.ராகுல் 26, துருவ் ஜுரல் 11, வாஷிங்டன் சுந்தர்4 என அடுத்தடுத்து சொற்ப ரன்னில் வெளியேறினார்கள்.

இதை தொடர்ந்து வழக்கம்போல் ஆபத்திலிருந்து காப்பாற்ற ரிஷப் பண்ட் உள்ளே வந்து பொறுமையாகவும் அதே சமயத்தில் சில பந்துகளை அடித்தும் விளையாடினார். இவருடன் ஜோடி சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி தனது அறிமுகப் போட்டியில் நல்ல நம்பிக்கையான பேட்டிங்கை வெளிப்படுத்தி விளையாடினார்.

- Advertisement -

147 வருட சாதனை

இன்றைய போட்டியில் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் ரிஷப் பண்ட் 650 ரன்கள் கடந்தார். இதன் மூலம் 147 வருட ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்கின்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பாக 1981 ஆம் ஆண்டு வரையில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் ஆலன் நாட் 643 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2.685 மீட்டர்.. விராட் கோலி கிரிக்கெட் வாழ்க்கையில் வித்தியாச முயற்சி.. பலன் அளிக்காமல் போன சோகம்

ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள் :

650 – ரிஷப் பண்ட் (13 இன்னிங்ஸ்)*
643 – ஆலன் நாட் + (22 இன்ங்ஸ்)
587-ஜெஃப் டுஜான் (18 இன்னிங்ஸ்)

- Advertisement -
Published by
Tags: Rishabh Pant

Recent Posts