72 பந்துகள்.. ரிஷப் பண்ட்டுக்கு நடந்திருக்கும் பெரும் சோகம்.. வரலாறு காணாத பரிதாபம்

0
79
Rishabh

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ரிஷப் பண்ட் மிக மோசமான முறையில் பேட்டிங் செய்து வருகிறார். இதன் காரணமாக மோசமான சாதனைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தங்களது சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி லக்னோ 10 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இனி அனைத்து போட்டிகளையும் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்புகள் இருக்கும்.

- Advertisement -

லக்னோ முதலாளியின் நம்பிக்கை

ரிஷப் பண்ட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெரிய விபத்தில் சிக்கி உயிர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்தார். இதனால் அவருடைய மனநிலை மிகவும் வலிமையாக மாறியிருப்பதாகவும், இப்படிப்பட்ட ஒருவர் தன் அணியில் இருப்பது தனக்கு பெருமையான விஷயம் என்று லக்னோ அணியின் உரிமையாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்ச தொகையாக 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட் லக்னோ அணியால் வழங்கப்பட்டார். மேலும் அந்த அணியில் அதிரடி வீரர்கள் பேட்டிங் யூனிட்டில் இடம்பெற்று இருந்ததால், அபாயகரமான பேட்டிங் யூனிட் கொண்ட அணியாக பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் தொடர்ந்து நான்காவது இடத்தில் சொதப்பி வந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

72 பந்துகளில் மோசமான சாதனை

இதன் காரணமாக ரிஷப் பண்ட் தன்னுடைய 4வது இடத்தை தியாகம் செய்து அப்துல் சமாத் மற்றும் ஆயுஸ் பதோனி போன்ற இளம் வீரர்களை பேட்டிங் செய்ய முன்னே அனுப்பிய சோகமும் நடந்தது. இந்த நிலையில் அவர் வேறு ஒரு மோசமான சாதனையையும் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : 5 கோப்பை அணிகளாலும் செய்ய முடியாத சாதனை.. மாஸ் காட்ட காத்திருக்கும் ஆர்சிபி.. இன்று புதிய வரலாறு உருவாகுமா?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் 11 போட்டிகளில் விளையாடி 12.80 ரன் ஆவரேஜில், 99.22 ஸ்ட்ரைக் ரேட்டில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரு போட்டியில் 63 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்தது 72 பந்துகளை சந்தித்தவர்களில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் இருக்கிறார். அதிரடிக்கு பெயர் போன ரிஷப் பண்ட் என்று டி20 கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட்டை விட மோசமாக விளையாடுவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!

- Advertisement -