5 கோப்பை அணிகளாலும் செய்ய முடியாத சாதனை.. மாஸ் காட்ட காத்திருக்கும் ஆர்சிபி.. இன்று புதிய வரலாறு உருவாகுமா?

0
108
RCB

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி புதிய வரலாறு படைப்பதற்காக காத்திருக்கிறது. இந்த போட்டி லக்னோ ஏகனா மைதானத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் எட்டு போட்டிகளை வென்று 16 புள்ளிகள் உடன் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் இன்றைய போட்டியை வென்றால் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட முடியும்.

- Advertisement -

ஆர்சிபி அணியின் வினோத கலக்கல்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெளியில் நடந்த முதல் மூன்று போட்டிகளையும் வென்று அசத்தியிருந்தது. அதே நேரத்தில் தங்களது சொந்த மைதானத்தில் தொடர்ந்து மூன்று போட்டிகளை தோற்று இருந்தது. இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் அந்த அணிக்கு மதில் மேல் பூனையாகவே ஆரம்பத்தில் அமைந்தது.

இருந்த போதிலும் ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானத்தில் வெற்றி பெற ஆரம்பித்ததும், வெளி மைதானத்தில் தொடர்ந்து வெற்றிகள் வர ஆரம்பித்ததும் அந்த அணியை புள்ளி பட்டியல் மேலே உச்சத்தில் வைத்தது. தற்போது முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பில் நுழையவும், கோப்பையை வெல்லவும் சிறந்த வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

ஐந்து கோப்பை அணிகள் செய்யாதது

இன்று லக்னோவா அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து கோப்பைகளை வென்றிருக்கும் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை தாண்டி மாபெரும் வரலாற்று சாதனையை படைப்பதற்கு ஆர்சிபி அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலி கிடையாது.. இந்திய அணிக்காக இப்போ எல்லாத்தையும் செய்வது இவர் ஒருத்தர்தான் – ரோஹித் சர்மா நெகிழ்ச்சி

இதுவரையில் ஆர்சிபி அணி இந்த ஐபிஎல் தொடரில் வெளியில் விளையாடிய 6 போட்டிகளையும் வென்று இருக்கிறது. வெளியில் தொடர்ந்து ஆறு போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற சாதனையை ஏற்கனவே படைத்து விட்டது. இன்று ஏழாம் வகுப்பு போட்டியை வெளியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியை வென்றால் ஒரு சீசனில் வெளியில் நடந்த மொத்த போட்டிகளையும் வென்ற முதல் அணி என்ற பிரம்மாண்ட சாதனையை படைக்கும். ஆர்சிபி மிகப்பெரிய வரலாற்றுக்கு சொந்தக்கார அணியாக மாறுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -