2023 உ.கோ பைனல்ல நான் ஆடி இருந்தா கதையே வேற.. கண்டிப்பா இது நடந்திருக்கும் – ரிஷப் பண்ட் பேட்டி

0
102
Rishabh

இந்திய அணியின் நம்பிக்கை இளம் நட்சத்திரம் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கி ஒன்றரை வருடங்கள் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

நடந்து முடிந்த 17 வது ஐபிஎல் சீசனில் திரும்பி வந்த ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டார். இந்தியா கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டதை பார்த்து, அவருடைய பேட்டிங் திறமைக்கு ஏற்ற வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று, தற்போது டி20 உலக கோப்பை தொடரில் பேட்டிங் வரிசையில் அவருக்கு மூன்றாவது இடத்தை கொடுத்திருப்பதாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ரிஷப் பண்ட் பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் மீண்டும் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து போட்டியை முடித்து வைத்தார்.

இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் இந்திய அணிக்காக விளையாடவும் இருக்கிறார். இந்த நிலையில் இந்த போட்டி குறித்தும், 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

ரிஷப் பண்ட் முதலில் 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து பேசும்பொழுது “நான் 2023 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தால், ஒன்று நமது இந்திய அணி 150 அல்லது 200 ரன்களில் ஆல் அவுட் ஆகி இருக்கும். இல்லையென்றால் 300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கும். நான் இந்த முறையில்தான் விளையாடியிருப்பேன்.

- Advertisement -

இதையும் படிங்க: ரோகித் பாகிஸ்தான் பழக்கம் இப்படியானதுதான்.. அதனால ப்ளீஸ் இத செய்யாதிங்க – முகமது கைப் வேண்டுகோள்

ஒரு கிரிக்கெட் வீரராக என்னால் இதைச் சொல்ல முடியும். பாகிஸ்தான் வீரர்களும் தங்கள் நாட்டிற்காக மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். இந்தப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து உணர்வுகள் ஒன்று கூடும் பொழுது அது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும். மேலும் எங்கள் நாட்டில் இருந்து எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கும் பொழுது அதுநல்லதாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.