ரோகித் பாகிஸ்தான் பழக்கம் இப்படியானதுதான்.. அதனால ப்ளீஸ் இத செய்யாதிங்க – முகமது கைப் வேண்டுகோள்

0
51
Kaif

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான நேரம் நெருங்க நெருங்க பரபரப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தற்பொழுது இந்தப் போட்டி குறித்து இந்திய அணிக்கு இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் ஒரு முக்கியமான எச்சரிக்கையைச் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் தற்பொழுது பலவீனமாகவே எல்லா துறைகளிலும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற ஒரு சிறிய அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வருகிறது. அந்த அணி ஒரு தொழில் முறை அணி போல காணப்படவில்லை. இதன் காரணத்தால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு மற்றவர்களுக்கு குறைவாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து முகமது கைஃப் கூறும் பொழுது “அமெரிக்க அணிக்கு எதிராக பாகிஸ்தான அணி தோல்வி அடைந்து வருகிறது. அவர்கள் தோல்வி அடைந்து வந்தாலும் கூட தயவு செய்து அந்த அணியை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் எப்பொழுதுமே இப்படித்தான் விளையாடுவார்கள். அவர்கள் இந்தியாவிற்கு எதிராக விளையாட வரும் பொழுது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பாகிஸ்தான் அணியிடம் நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் பொழுது அவர்களால் மிகச் சிறப்பாக செயல்பட முடியும். எனவே இந்திய அணி எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். நாளையபோட்டியில் இந்திய அணி சிறந்த விளையாட்டை விளையாட வேண்டும்.

முதல் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றி பெற்றது. பேட்டிங் தவிர்த்து பந்து வீச்சை எடுத்துக் கொண்டாலும் ஹர்திக் பாண்டியா விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் பும்ரா தன்னுடைய இரண்டு ஓவரில் ஒரு சிறப்பான மெய்டன் ஓவரை வீசினார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய டீமுக்கு அழுத்தம் இல்லைனு யார் சொன்னாங்க.. இத ஏத்துக்கலனா மனுஷங்களே இல்ல – நசீம் ஷா பேட்டி

ரோகித் சர்மா சிறப்பான அரைசதம் அடித்து காயத்தின் காரணமாக வெளியே சென்றார். மேலும் ரிஷப் பண்ட் ஆட்டம் இழக்காமல் நின்று ஆட்டத்தை முடித்து வைத்தார். என்னுடைய கருத்துப்படி இந்தியா இதற்கு மேல் ஒரு போட்டிக்கு தயாராக முடியாது” என்று கூறியிருக்கிறார்.