நான் ஓபனா சொல்றேன்.. எங்க எல்லாருக்குமே இந்த ஒரு விஷயத்துல அழுத்தம் இருக்குது – ரிஷப் பண்ட் பேட்டி

0
515
Rishabh

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்கா நியூயார்க் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா சந்திக்கும் போட்டிகள் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் பேட்டி அளித்திருக்கிறார்கள்.

இந்திய அணி நாளைய தனது முதல் ஆட்டத்தில் விளையாட இருக்கும் நிலையில், இரண்டாவது போட்டியில் மிக முக்கியமான பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்கா நியூயார்க் மைதானத்தில் மீண்டும் விளையாடுகிறது. மேலும் மூன்றாவது போட்டியை அமெரிக்க அணிக்கு எதிராகவும் இதே மைதானத்தில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது இந்த உலகக் கோப்பை தொடரில் நடைபெற உள்ள போட்டிகள் குறித்தும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்தும் இந்திய துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார். மேலும் அவருடன் பங்கு பெற்ற ரிஷப் பண்ட்டும் பேசியிருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து முதலில் பேசிய ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது ” நாம் செல்லும் இடமெல்லாம் கூட்டம் இருக்கிறது. எங்கள் அணி இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இருப்பது சாதாரணமான விஷயம். எனவே நாம் இதுபோன்ற விஷயங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொண்டு போட்டியில் கவனம் செலுத்துவது நல்லது.

ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் வந்து எங்களை எல்லா நேரங்களிலும் அன்புடன் ஆதரிக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் நாங்கள் விளையாட உள்ளே செல்லும் பொழுது எதைப் பற்றியும் நாங்கள் நினைக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ.. இந்த இந்திய வீரர்தான் அதிக ரன் குவிப்பார்.. வேற லெவல் பிளேயர் – ஸ்மித் கணிப்பு

இதுகுறித்து ரிஷப் பண்ட் கூறும்போது “இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஒரு சிறப்பு போட்டி என்பதால் எப்பொழுதும் மிகவும் உற்சாகமாக இருக்கும். மக்கள் இந்த போட்டிகளை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதால், விளையாடக் கூடிய எங்கள் எல்லோருக்குமே அழுத்தம் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.