தோனியை விட நான் சிறந்தவன் கிடையாதுனு சொல்லாத ரிஷப் பண்ட்.. வித்தியாசமான பதில்.. ரசிகர்கள் ஆச்சரியம்

0
216
Rishabh

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த ரிஷப் பண்ட் தோனியை விட தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுவது பற்றி வித்தியாசமான பதிலளித்திருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு இறுதியில் மோசமான சாலை விபத்தில் சிக்கி மீண்டு வந்த ரிஷப் பண்ட் முதன்முறையாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் களம் இறங்கினார். இந்த நிலையில் மறுவருகையில் முதல் போட்டியிலேயே சதம் அடித்திருப்பது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

தோனி சாதனை சமன்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள் நடித்திருந்தார். அவரே இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக சதம் அடித்தவராகவும் இருந்தார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததின் மூலமாக அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோணியுடன் முதல் இடத்தை பகிர்ந்து சாதனையை சமன் செய்திருக்கிறார். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்த பேட்ஸ்மேன் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

- Advertisement -

யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும்

இது குறித்து பேசி இருக்கும் ரிஷப் பண்ட் கூறும்போது “இது சிஎஸ்கே ஹோம் கிரவுண்ட் இங்கு மஹி பாய் நிறைய போட்டிகள் விளையாடுகிறார். நான் முன்பே சொன்னது போல நான் நானாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். வெளியில் யார் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது குறித்து நான் கவனம் செலுத்துவதில்லை. விஷயங்களை எளிமையாக வைத்து செயலில் கவனம் செலுத்துவதை நோக்கமாக வைத்திருக்கிறேன்”

“நான் இந்த போட்டியில் என் சிந்தனை செயல்முறையை எளிமையாக வைத்து சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடினேன். 30 ரன்னுக்கு மூன்று விக்கெட் இழந்து இருந்த காரணத்தினால் அந்த சூழ்நிலைக்கு விளையாடினேன். மேலும் அடுத்து ராகுல் பாய் விக்கெட் மட்டுமே பேட்ஸ்மேன் விக்கெட் ஆக இருந்தது. மேலும் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்க நான் சரியாக விளையாடி சதம் அடிக்க நினைத்தேன்”

இதையும் படிங்க : 68 ரன் 2 விக்கெட்.. களத்தில் ரச்சின் ரவீந்தரா.. போராடும் இலங்கை நியூசி அணிகள்.. திரில் முதலாவது டெஸ்ட்

“நாங்கள் இன்று மதிய உணவு இடைவேளைக்கு சென்ற பொழுது எங்களுக்கு ஒரு செய்தி கூறப்பட்டது. ஒரு மணி நேரம் பேட்டிங் செய்ய நேரம் தருவதாகவும் எவ்வளவு ரன்கள் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளவும் என்று ரோகித் பாய் கூறினார். நான் இந்த நேரத்தில் 150 ரன்கள் எடுக்க முடியும் என நினைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -