68 ரன் 2 விக்கெட்.. களத்தில் ரச்சின் ரவீந்தரா.. போராடும் இலங்கை நியூசி அணிகள்.. திரில் முதலாவது டெஸ்ட்

0
508
Rachin

தற்போது இலங்கையில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியை பரபரப்பான கட்டத்தை நான்காவது நாளில் எட்டி இருக்கிறது.

நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு சவால் கொடுக்க நியூசிலாந்து அணி இந்த தொடரை முழுதாக வெல்ல வேண்டியது முக்கியமாக இருக்கிறது.

- Advertisement -

இலங்கை அணி பிரஷர் போட்ட நியூசிலாந்து

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு இளம் வீரர் கவிந்து மெண்டிஸ் சிறப்பாக விளையாடி 113 ரன்கள் குவித்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 340 ரன்கள் எடுத்து 35 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணிக்கு டாம் லாதம் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு பிரஷர் போட்ட இலங்கை

இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 309 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு கருணரத்தினே 83, மேத்யூ 50 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார். நியூசிலாந்து அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இலக்கு நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டாம் லாதம் 28, கான்வே 4, கேன் வில்லியம்சன் 30, டேரில் மிட்செல் 8, டாம் ப்ளூன்டல் 30, கிளன் பிலிப்ஸ் 4, சான்ட்னர் 2, சவுதி 2 என எட்டு பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

அதே சமயத்தில் ஆட்டம் இழக்காமல் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா 158 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 91 ரன்கள் எடுத்து நான்காவது நாள் முடிவில் களத்தில் நிற்கிறார். இவருடன் அஜாஸ் படேல் 15 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : கில் கேப்டனா ஆடிய அணி சாம்பியன்.. சாய் சுதர்சன் தனியாக போராட ருதுராஜ் அணி தோல்வி.. துலீப் டிராபி 2024

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்படுகிறது ஆனால் கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது. போட்டியின் ஐந்தாவது நாளில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான நிலையில் ரச்சின் ரவீந்தரா தனி ஒரு வீரராக இலங்கை அணியை வீழ்த்துவாரா? இல்லை இலங்கை அணி நியூசிலாந்து அணியை வென்று இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை கொஞ்சம் எளிதாக்குமா? என்கின்ற பரபரப்பான சூழல் நிலவுகிறது.

- Advertisement -