இந்திய அணிகளின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து தான் வெளியில் வந்தது பணத்திற்காக கிடையாது என கவாஸ்கர் பேச்சுக்கு மறைமுகமாக பதில் அளித்து இருக்கிறார்.
ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கி இரண்டு ஆண்டுகள் விளையாட முடியாமல் இருந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக திரும்பி வந்தார். மேலும் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேன் ஆகவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியில் தேர்வானார். கோப்பை வென்ற அணியில் விளையாடவும் செய்தார்!
கவாஸ்கர் வெளியிட்ட சர்ச்சை கருத்து
கவாஸ்கர் இது குறித்து பேசும் பொழுது “ஐபிஎல் ஏலத்தின் இயக்கவியல் முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அதனால் விஷயங்கள் எப்படி மாறிக்கொண்டே இருக்கும் என யாருக்கும் தெரியாது. மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் தங்கள் அணியில் ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். சில சமயங்களில் வீரர்களுக்கும் அணி உரிமையாளர்களுக்கும் நடுவில் தக்க வைப்பதில் பணம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது உண்மைதான்”
“நீங்கள் தற்போது தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களில் சிலருக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதை பார்ப்பீர்கள். நிச்சயம் இது அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சரியான சம்பளம் கிடையாது. எனவே தக்க வைப்பதில் வீரர்கள் தங்கள் சம்பளம் குறித்து அணி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்”
நான் பணத்திற்காக வெளியில் வரவில்லை
இது சம்பந்தமாக மேலும் பேசிய கவாஸ்கர் ” எனவே நான் அங்கு ஏதாவது ரிஷப் பண்ட் மற்றும் அணி உரிமையாளர்களிடம் கருத்து வேறுபாடுகள் தக்க வைப்பதில் பணம் தொடர்பாக இருந்திருக்கலாம் என்று உறுதியாக நினைக்கிறேன். இருந்த போதும் அவர்கள் திரும்ப அவரை வாங்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஏலத்தில் இன்னொரு கேப்டனை தேட வேண்டியதாக இருக்கும் என்று கூறி இருந்தார்.
இதையும் படிங்க : புஜாரா வேண்டாம் கில் போதும்.. அவர் என்னைவிட சிறந்தவர்.. காரணம் இதான் – ராகுல் டிராவிட் விளக்கம்
கவாஸ்கரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக மறைமுகமாக பதிவிட்டுள்ள ரிஷப் பண்ட் அதில் கூறும் பொழுது “நான் டெல்லி கேப்பிட்டல் அணியில் தக்கவைக்கப்படாதது பணத்திற்காக இல்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்”என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் வேறு ஏதோ கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது.






