தற்போது இந்திய டெஸ்ட் அணியில் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்திற்கு கில் மிகவும் பொருத்தமாக இருப்பார் என ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
முதல் முறையாக ரவி சாஸ்திரி பயிற்சியில் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் கில் அறிமுகம் செய்யப்பட்டார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் அங்கு விளையாடிய கில் 50க்கும் மேற்பட்ட ரன் சராசரி உடன் சிறப்பாக வெளியில் வந்தார். மேலும் மிக முக்கியமான கப்பா டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்கள் குவித்திருந்தார்.
தன்னைத் தானே மாற்றிக்கொண்ட கில்
எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமான கில் திடீரென 2023 வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது தன்னை பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் ராகுல் டிராவிட்டிடம் கேட்டு இறக்கிக் கொண்டார். இருந்த போதும் அந்த இடத்தில் அவருக்கு சிறந்த ரன்கள் எதுவும் வராமல் இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் கில் சிறப்பான முறையில் விளையாட இரண்டு சதங்கள் எடுத்து மீண்டும் வந்தார். அடுத்து பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் அந்த இடத்தில் நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தார்.
என்னை விட சிறந்தவர்
கில் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது ” இந்திய அணிக்கு தற்பொழுது கில் கிடைத்திருக்கிறார். அவர் ஒரு பயங்கரமான ஆட்டக்காரர். கப்பா டெஸ்ட் வெற்றியில் எல்லோரும் ரிஷப் பண்ட் பற்றி பேசுகிறார்கள். ஆனால் கில் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்தது மிகவும் முக்கியமானது. என்னையும் புஜாராவையும் விட அவர் பேட்டிங்கில் மிகவும் வித்தியாசமான முறையில் சிறப்பானவராக இருக்கிறார்”
இதையும் படிங்க : ஓபனா சொல்றேன் இந்திய அணியின் எக்ஸ் பேக்டர் இவர்தான்.. என்னை மிரள வச்சாரு – டிராவிஸ் ஹெட் பேட்டி
“டாப் ஆர்டரில் இருந்து வரும் ரன்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் முக்கியமாக இருக்கும். முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் இரண்டு பேட்ஸ்மேன்களாவது நல்ல ரன்களை எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் கூக்கபுரா புதிய பந்தில் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் தங்கி இருந்து விளையாடி அதை கடக்க வேண்டும்.இது உண்மையில் உங்களுடைய கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை கட்டுப்படுத்தி சிறப்பாக விளையாட உதவி செய்யும்” என்று கூறியிருக்கிறார்.






