நாங்க 4 பேர் இப்படி.. 4 பேர் அப்படி.. இந்த பிளான்ல எதிர் டீம் பவுலர்கள் தப்பிக்க முடியாது – அக்சர் படேல் விளக்கம்

0
549
Axar

நேற்று இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச்சில் அக்சர் படேல் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அதை பயன்படுத்திய இந்திய அணி இலங்கை அணியை ஆல் அவுட் செய்து வென்றது. இந்த நிலையில் கேப்டன் சூரியகுமார் எப்படி செயல்படுகிறார்? தங்கள் அணியின் பேட்டிங் யூனிட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

தற்போது இந்திய வெள்ளைப்பந்து அணிக்கு அக்சர் படேல் சிறந்த சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக உருவாகி வருகிறார். மேலும் ரவீந்திர ஜடேஜா இடத்தை ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முழுவதுமாகவே நிரப்பி இருக்கிறார் என்று கூறலாம். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறந்த பங்களிப்பை அணிக்கு கொடுத்திருந்தார்.

- Advertisement -

இனி அவரை இந்திய வெள்ளைப்பந்து எல்லா ஆட்டங்களிலும் பார்க்கலாம் என்கின்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தற்போது புதிய கேப்டனாக வந்திருக்கும் சூரியகுமார் யாதவ் களத்தில் தன்னை எப்படி உணர வைக்கிறார் என்பது குறித்து வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அக்சர் படேல் கூறும்பொழுது “கடந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் சூர்யா பாய் தலைமையில் நான் விளையாடினேன். அவர் பந்துவீச்சாளர்களின் கேப்டன் என்று எனக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும் முதலில் நம்மை முடிவு செய்ய விட்டு ஒரு வகையில் சுதந்திரம் கொடுக்கிறார். மேலும் நான் பந்துவீச்சில் அடி வாங்கினால் கூட அவர் வந்து சிறந்த பந்தை தான் வீசினீர்கள் என்று கூறுவார். இதன் காரணமாக பந்துவீச்சாளர்களுக்கும் அவருக்கும் இடையே நல்ல பந்தம் இருக்கிறது.

- Advertisement -

நாங்கள் முதல் மூன்று நான்கு ஓவர்கள் ரண்களுக்கு சென்ற பொழுது அவர் எங்களிடம் வந்து இப்படி பந்து வீசலாம் அப்படி பந்து வீசலாம் என்று எங்களுக்கு கருத்துகளை கூறி உதவி செய்து கொண்டு இருந்தார். மேலும் எங்களுடைய ஓவரில் பவுண்டரி சிக்ஸர் சென்றால் பிரச்சனை இல்லை என்று கூறினார். உங்களை ஆதரித்து ஒரு கேப்டன் உங்களுக்கு பின்னால் இருக்கும் பொழுது அது உங்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கும்.

இதையும் படிங்க : இன்னும் 7 ரன்கள்.. 2024 உலகின் முதல் வீரராக.. ஜெய்ஸ்வால் படைக்க இருக்கும் மெகா சாதனை.. புதிய சூப்பர் ஸ்டார்

தற்பொழுது எங்களுடைய அணியில் நான்கு வலதுகை மற்றும் நான்கு இடது கை பேட்ஸ்மேன் இருக்கிறார்கள். எனவே நாங்கள் தொடர்ந்து ரைட் லெப்ட் காம்பினேஷனை கொண்டு வர முடியும். இதன் மூலமாக பந்துவீச்சாளர்களின் லைன் மற்றும் லென்த்தை உடைக்க முடியும். மேலும்எதிரணியில் பவுலிங் ஆப்ஷன் எப்படி இருக்கிறது என்று பார்த்து நாங்கள் அதற்கேற்றபடி எங்கள் பேட்ஸ்மேன்களை களம் இறக்குவோம்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -