ரிஷப் பண்ட்? தினேஷ் கார்த்திக்? யார் டி20 உலகக்கோப்பை அணியில் இருப்பார்கள் – இதுகுறித்து ரிஷப் பண்ட்டே பேட்டி!!

0
167

உலக கோப்பை டி20 அணியில் இடம்பெறுவது குறித்து அண்மையில் நடந்த பேட்டியில் ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது உச்சத்தை பெற்றிருக்கிறது என்று கூறலாம். பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தபோது, கடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு, மீண்டும் இந்திய டி20 அணிக்குள் இடம்பிடித்து, தென் ஆப்பிரிக்கா உடன் நடந்த டி20 தொடரில் முதல் முறையாக அரைசதம் அடித்தார். தொடர்ந்து கீழ் வரிசையில் களமிறங்கி பினிஷர் ஆக விளையாடுகிறார்.

- Advertisement -

ரிஷப் பன்ட் இல்லாத போது இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக், நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் பெரிதளவில் செயல்படவில்லை. ரிஷப் பன்ட் சற்று நன்றாக விளையாடினார். அதற்கு முன்பு நடந்த தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு பண்ட் செயல்படவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட் இருவரும் ஒரே மாதிரியான வீரர்கள். இவர்கள் இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு ஆல்ரவுண்டர்களை கொண்டு வந்தால் கூடுதல் பந்துவீச்சு வாய்ப்பாக இந்திய அணிக்கு அமையும் என இந்திய தேர்வுக்குழு ஆணையத்தில் பேச்சுக்கள் அடிபடுவதாக தகவல்கள் வருகின்றன.

ஆசிய கோப்பையை டி20 தொடர் துவங்குவதற்கு முன்பாக ஜிம்பாப்வே சென்று மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. டி20 உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் கூடுதல் பந்துவீச்சு இருப்பது அவசியம். இதன் அடிப்படையில், டி20 உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இடம் பெறுவது சாத்தியமற்றதாக இருக்கலாம் அல்லது இருவரும் இடம்பெற்றாலும் விளையாடும், 11 வீரர்களில் இருவரும் இருப்பதில் சந்தேகம்தான்.

- Advertisement -

சமீபத்தில் ரிஷப் பன்ட் கொடுத்த பேட்டியில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “இந்திய அணியில் இடம்பெறும் ஒவ்வொரு வீரரும் 100% கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பர். அதை கொடுத்தாலும் அடுத்த போட்டியில் இருப்போமா? இல்லையா? என்ற சந்தேகம் தான் நிகழும். ஏனெனில் மைதானத்திற்கு ஏற்ப வீரர்களை அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் தான் தேர்வு செய்வர். ஆகையால் என்னால் இது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது.” என தெளிவாக பதில் அளித்தார்.

ரிஷப் பண்ட் நான்காவது அல்லது ஐந்தாவது வீரராக களம் இறங்கி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சற்று அதிரடியாகவும் விளையாடுகிறார். அதேநேரம் கடைசி நான்கு அல்லது ஐந்து ஓவர்களில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார். குறைந்தபட்சம் 20-30 ரன்கள் அதிகமாக அடித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்துகிறார். ஐபிஎல் தொடருக்கு பிறகு நடைபெற்ற சில போட்டிகளில் இவரின் தாக்கத்தினால் இந்திய அணி வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

நடக்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு, டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என பி சி சி ஐ தெரிவித்துள்ளது. அதற்கு முன்னர் ஆலோசனைகள் நடத்தப்பட்டு நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்போம்.