இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் ரிஷப் பண்ட் செய்த ஒரு தவறு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திருக்கின்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆடுகளமும் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் மெதுவாக விளையாடிய சேர்த்தார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியும் அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
எனினும் மூன்றாவது நாள் ஆட்ட நேர தொடக்கத்தில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி விளையாடியது. 53 ரன்களுடனும் ராகுலும் 19 ரன்களும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தன. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.
ஆடுகளமும் முற்றிலும் பேட்டிகளுக்கு சாதகமாக மாறியது. பந்தும் ஸ்விங் ஆகவில்லை. இதனால் இங்கிலாந்து பல முயற்சிகள் செய்து பார்த்து அதனை இந்த ஜோடி லாவகமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் சிக்சர், பவுண்டரி என பண்ட் அடிக்க ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது. இந்த கட்டத்தில் தான் மதிய நேர உணவு இடைவேளைக்கு முன்பான கடைசி ஓவரை சோயிப் பஷிர் வீசினார்.
அப்போது எதிர்முனையில் ராகுல் 98 ரன்கள் உடன் இருந்தார். இதனால் மதிய உணவு இடைவெளிக்கு முன்பே ராகுல் சதம் அடிக்க வேண்டும் என நினைத்த பண்ட், 74 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென்று பக்கத்திலேயே ரன் அடித்து விட்டு ஓடினார். ஆனால் அந்த பந்தை எடுத்து ஸ்டோக்ஸ் அபாரமாக ரன் அவுட் ஆக்கினார்.
இதையும் பாருங்க: 2 நாளாக நடக்கும் பெரிய தவறு.. இதுக்கு எல்லாம் அபராதம் விதிக்கக் கூடாது.. இந்த பசங்க எல்லாம் ரொம்ப பணக்காரங்க.. முன்னாள் இங்கிலாந்து வீரர் தாக்கு
இதன் மூலம் பண்ட் 74 ரன்களில் ஆட்டம் இழந்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது உணவு நேர இடைவெளியின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கிறது. இது இங்கிலாந்து அணி ஸ்கோரை விட 139 ரன்கள் குறைவாகும். ரிஷப் பண்ட் செய்த இந்த தவறு இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் கடுப்படைய செய்திருக்கிறது. தேவையில்லாமல் தனிப்பட்ட சாதனைகளை துரத்துவதற்காக வீரர்கள் தவறு செய்து விட்டதாக விமர்சகர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.