பேட்டிங்கில் கெத்து காட்டிய பண்ட்.. தோனியின் சாதனையை உடைத்து நம்பர் 1 இடத்திற்கு உயர்வு.. இந்தியா இங்கி முதல் டெஸ்ட்

0
271

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கிய இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் சாய் சுதர்சன் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றார். கில் தலைமையிலான இந்திய அணி பெரிய நம்பிக்கையோடு முதல் போட்டியை எதிர்கொண்டது.

இதில் பேட்டிங் துவங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் இறங்க, இந்த ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. இந்த இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 24.5 ஓவர்களில் 91 ரன்கள் குவித்த நிலையில் கே.எல் ராகுல் 42 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அதுக்கு பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, கேப்டன் கில் உடன் கூட்டணி வைத்த ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி ஆறாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

தோனியின் சாதனை முறியடிப்பு

101 ரன்கள் குவித்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்க, அதற்குப் பின்னர் களம் இறங்கிய ரிஷப் பண்ட் கேப்டன் கில் உடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.102 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 65 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் கேப்டன் சுப்மான் கில் 175 பந்துகளில் 127 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். இதில் 65 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க:கேப்டன் கில் மாஸ் சதம்.. விராட் கோலி 2 போட்டியில் செய்ததை.. ஒரே போட்டியில் செய்து அசத்தல்

அதாவது செனா நாடுகளில் ஆசிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் ஆன எம் எஸ் தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார். 1731 ரன்கள் குவித்து எம் எஸ் தோனி இதுவரை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில் ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் அந்த சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் மூன்றாவது வரிசையில்1099 ரன்கள் குவித்து இன்ஜினிர், 850 ரன்கள் குறித்து நான்காவது வரிசையில் முகமது ரிஸ்வான், 831 ரன்கள் குவித்து இலங்கையின் தினேஷ் சந்திமால் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

- Advertisement -