ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணிக்காக எந்த ஒரு வீரரும் நிகழ்த்தாத சாதனையைப் படைத்துள்ள கேப்டன் ரிஷப் பண்ட்

0
380
Rishabh Pant Delhi Capitals

ஐ.பி.எல்-ன் இன்றைய டபுள் ஹெட்டரின் இரண்டாவது போட்டியில், மஹாராஷ்ட்ரா புனே மைதானத்தில் டெல்லி அணியும் குஜராத் அணியும் மோதி வருகின்றன!

பனிப்பொழிவு எல்லா ஆட்டங்களிலும் முக்கிய பங்கு வகிக்க, புனே மைதானம் கடலுக்குத் தொலைவில் இருப்பதால் பனிப்பொழிவு தொந்தரவு பெரிதாய் இல்லை. இதனால் இத்தொடரில் முதல் முறையாக டெல்லி அணி டாஸ் ஜெயித்த அணியாக பேட்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் அணிக்கு மேத்யூவேட், விஜய் சங்கர் ஏமாற்றம் தர, கேப்டன் ஹர்திக் பண்ட்யா பொறுப்பாக ஒருமுனையில் ஆட, மறுமுனையில் சுப்மன் கில் அசத்தலாக ஆடி 84 ரன்களை 45 குவித்து ஆட்டமிழந்தார். இருபது ஓவர்களின் முடிவில் 171 ரன்களை சேகரித்தது டெல்லி அணி!

அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த டெல்லி அணிக்கு பிரித்வி, ஷெப்பர்ட், மன்தீப் சிங் என முதல் மூவர் சரியான பங்களிப்பு அளிக்காத போதும், கேப்டன் ரிஷாப் பண்ட் ஒருமுனையில் 29 பந்தகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாலும், டெல்லி அணியைப் போட்டிக்குள் வைத்தே வெளியேறி இருக்கிறார்.

இதன் ஐ.பி.எல் வரலாற்றில் டெல்லி அணிக்காக 2,500 ரன்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றுள்ளார்!