எந்த ஆசிய விக்கெட் கீப்பரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ள பண்ட் – ஆதம் கில்கிறிஸ்ட் சாதனையும் சமன்

0
2915
Rishabh Pant and Adam Gilchrist

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காத வகையில் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றன.

போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 210 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது தென் ஆபிரிக்க அணி விளையாடிக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது இன்னிங்சில் பட்டையை கிளப்பிய ரிஷப் பண்ட்

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் அவ்வளவு சிறப்பாக விளையாட வில்லை என்றாலும் தனி ஒரு ஆளாக நின்று இறுதிவரை ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 100* ரன்கள் குவித்தார். 139 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 100 ரன்கள் குவித்து இறுதிவரை அதிரடியாக விளையாடினார்.

இருபத்தி நான்கு வயதில் சச்சினுக்கு அடுத்த படியாக ரிஷப் பண்ட்

24 வயதில் இந்திய அணி வீரர்கள் மத்தியில் அதிகபட்சமாக ஐந்து நாடுகளில்( இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை ) சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

ரிஷப் பண்ட் 24 வயதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் சதம் குவித்து நான்கு நாடுகளில் சதம் குவித்த வீரராக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்திய விக்கெட் கீப்பராக பண்ட் படைத்துள்ள மற்றொரு சாதனை

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் மத்தியில் ரிஷப் பண்ட் மட்டுமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் சதம் அடித்து இருக்கிறார். இந்திய அணியில் விளையாடிய எந்த ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனும் மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளில் சதம் குவித்தது இல்லை.

அதேசமயம் மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளில் இதற்கு முன் இடம் ஆடம் கில்கிறிஸ்ட் மட்டுமே சதம் குவித்து அவருக்கென தனி சாதனையை தக்க வைத்திருந்தார். தற்பொழுது ரிஷப் பண்ட் மிகக் குறைந்த வயதிலேயே மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளில் சதம் அடித்து அவருடைய சாதனையை தற்போது பகிர்ந்துள்ளார்.