61 பந்து 118 ரன்.. அதிரடி சதத்துடன் பல்டி அடித்த ரிஷப் பண்ட்.. லக்னோவில் மாஸ் ரெக்கார்டு.. ஆர்சிபி பரிதாபம்

0
247
Rishabh

இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு முக்கியமான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடி சதம் அடித்து புது சாதனை படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் வென்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி சுற்றில் விளையாடலாம் என்கின்ற நிலையில் ஆர்சிபி களம் இறங்கியது. லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிட்சல் மார்ஸ் புதிய சாதனை

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த பிரட்ஸ்கீ 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்து 37 பந்தில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்கு அதிக ரன்கள் எடுத்தவராக கேஎல்.ராகுல் படைத்திருந்த சாதனையை முறியடித்தார். கேஎல்.ராகுல் லக்னோ அணிக்கு 617 ரன்கள் ஒரு சீசனில் எடுத்திருந்தார். மிட்சல் மார்ஸ் இதைத் தாண்டி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் சூறாவளி தாக்குதல்

இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த கேப்டன் ரிஷப் பண்ட் இந்த தொடரில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு எடுத்ததும் அதிரடியில் ஈடுபட்டு 29 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 54 பந்தில் தன்னுடைய இரண்டாவது ஐபிஎல் சத்தத்தை அடித்து குட்டிக்கரணம் போட்டு கொண்டாடி அசத்தினார்.

இதையும் படிங்க : விராட் ரோஹித் போனதால எந்த பிரச்சனையும் இல்லை.. இந்த 2 பேர் பாத்துக்குவாங்க – கபில் தேவ் பேச்சு

மேலும் இறுதி வரை களத்தில் நின்ற ரிஷப் பண்ட் 61 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் மொத்தம் 118 ரன்கள் குவித்து ஆர்சிபி அணிக்கு சோகத்தை உண்டாக்கி இருக்கிறார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 227 ரன்கள் குவித்து இருக்கிறது. ஆர்சிபி அணிவென்றால் பஞ்சாப் அணியை முதல் தகுதி சுற்றில் சந்திக்கலாம். தோல்வி அடைந்தால் எலிமினேட்டர் சுற்றில் பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக விளையாட வேண்டி இருக்கும்.

- Advertisement -