விராட் ரோஹித் போனதால எந்த பிரச்சனையும் இல்லை.. இந்த 2 பேர் பாத்துக்குவாங்க – கபில் தேவ் பேச்சு

0
159
Kapil

இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை பெரிதும் பாதிக்காது என கபில்தேவ் அதிரடியாக கூறியிருக்கிறார்.

இந்திய அணி முதல்முறையாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இல்லாமல் நீண்ட காலம் கழித்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருக்கிறது. மிக முக்கியமாக விளையாடுவதற்கு கடினமான இங்கிலாந்து சூழ்நிலையில் சுப்மன் கில் தலைமையில் இளம் அணி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது.

- Advertisement -

வெற்றிடம் ஏற்படுவது உறுதி

தற்போது இந்த இரண்டு பெரிய வீரர்கள் ஓய்வு பெற்றிருப்பதால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பெரிதாக பாதித்து விடாது எனவும், எப்பொழுது கடந்த காலங்களில் பெரிய வீரர்கள் ஓய்வு பெற்ற பொழுதும், இந்திய அணி மேலும் சில இளம் வீரர்களால் வலிமை அடைந்து மீண்டு வந்திருக்கிறது என்றும் கபில்தேவ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கபில்தேவ் பேசும்பொழுது “இந்த சிறுவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் விளையாட இருக்கிறார்கள். எனவே அந்த சூழ்நிலைக்கு ஏற்ப நமது இளம் வீரர்கள் மாறி கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றதால் ஒரு வெற்றிடம் உருவாகப் போவது உண்மைதான். இதை இங்கு யாராலும் மறுக்க முடியாது”

- Advertisement -

கவாஸ்கர் சச்சினும்தான் போனாங்க

“அதே சமயத்தில் கவாஸ்கர், சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய ஒரு ஓய்வு பெற்ற பொழுதும் இதே மாதிரியான வெற்றிடங்கள் ஏற்படவே செய்தது. ஆனால் மீண்டும் புதிய வீரர்கள் வந்து இந்திய அணியை கட்டி எழுப்பினார்கள். மீண்டும் அப்படியே மறுபடியும் இந்திய அணி எழும்பி வரும். இங்கு கிடைக்கும் வாய்ப்பு இளம் வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் வெல்லலாம் அல்லது தோற்கலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் கற்றுக் கொள்வீர்கள்”

இதையும் படிங்க : சிஎஸ்கே தோல்வி.. நானும் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுகிறேன்.. ஆனா அதை செய்ய மாட்டேன் – அஸ்வின் பேட்டி

“நமது அணி இளமையாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாமல் இருப்பது நல்லது. இது கேப்டன் கில் மற்றும் அவரது அணிக்கு உதவும். மேலும் அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பது விளையாடுவதற்கு அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கு உதவியாக அமையும். இளம் வீரர் கில் உலகை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்கும் ஒரு வீரர். மேலும் பும்ரா உதவி உடன் அவர் ஒரு வலுவான கேப்டனாக வெளிப்படுவார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -