இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் இருந்த சிராஜிடம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடைபெற்றது.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி சிறப்பான முறையில் மேற்கொண்டு விளையாடிய 400 ரன்கள் கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
இரண்டாவது நாளில் திருப்பம்
இந்த நிலையில் இரண்டாவது நாளில் மேற்கொண்டு இந்திய அணி 37 ரன்கள் மட்டும் எடுத்து கைவசம் இருந்த நான்கு விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்று டஸ்கின் அகமத் தனது பந்துவீச்சில் மூன்று விக்கெட் கைப்பற்றி இந்தியா ஆல் அவுட் ஆக முக்கிய காரணமாக இருந்தார்.
நேற்று முழுவதும் டஸ்கின் அகமத் பந்தை கொஞ்சம் ஷார்ட்டாக வீசி வந்தார். கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள் அவர் பந்தை கொஞ்சம் மேலே வீச வேண்டும் என்று கூறி வந்தார்கள். நேற்று முதல் நாள் போட்டி முடிந்து இன்று இரண்டாம் நாளில் திரும்பி வந்த டஸ்கின் அகமத் பந்தின் லென்த்தை மாற்றி மேலே வீசி இந்திய அணியை ஆல் அவுட் செய்தார்.
சிராஜிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்
இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கியது. பும்ரா தன்னுடைய முதல் ஓவரின் கடைசி பந்தில் பங்களாதேஷின் தொடக்க ஆட்டக்கார ஷத்மன் இஸ்லாமை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார்.
இது தொடர்ந்து முகமது சிராஜ் இடதுகை துவக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹசனுக்கு இன்-ஸ்விங்காக வீசிய ஒரு பந்து அவரது கால் காப்பில் பட்டது. இந்திய வீரர்கள் முறையிட நடுவர் அவுட் தரவில்லை. உடனே முகமது சிராஜ் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் ரிவ்யூ கேட்க சொல்லி மிகவும் அழுத்தம் கொடுத்தார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் இருவரும் ரோகித் சர்மாவிடம் ரிவ்யூ செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். குறிப்பாக ரிஷப் பண்ட் ரோகித் சர்மாவிடம் அழுத்தி ரிவ்யூ செல்ல வேண்டாம் என்று கூறினார்.
இதையும் படிங்க : 6 வருட ரோகித் சர்மாவின் தனித்துவ சாதனை.. டிராவிஸ் ஹெட் முறியடித்தார்.. இங்கிலாந்து அணிக்கு எதிராக ரெக்கார்ட்
இந்த நிலையில் ரீப்ளேவில் பார்த்த பொழுது பந்து ஸ்டெம்பை அடிக்க அது கிளீன் எல்பிடபிள்யு என்று தெரிந்தது. அப்பொழுது முகமது சிராஜ் ரிஷப் பண்ட் இடம் மைதானத்தில் இருந்த ஸ்கிரீனை காட்டி “இப்படி செய்து விட்டாயே” என்று சொன்னார். அதற்கு ரிஷப் பண்ட் உடனடியாக தெரியாமல் நடந்து விட்டது என்று கையை உயர்த்தி மன்னிப்பு கேட்டார். இதற்கு பரிகாரமாக ஆகாஷ் தீப் அடுத்து வந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றி ரிஷப் பண்ட்டை காப்பாற்றினார். அதே சமயத்தில் ரிவ்யூ கேட்க வேண்டாம் என்று சொன்ன கேஎல்.ராகுல் இந்த விஷயத்தில் தப்பித்து விட்டார்!