6 வருட ரோகித் சர்மாவின் தனித்துவ சாதனை.. டிராவிஸ் ஹெட் முறியடித்தார்.. இங்கிலாந்து அணிக்கு எதிராக ரெக்கார்ட்

0
181
Rohit

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் டிரெண்ட் பிரிட்ஜ் நாட்டிங்ஹாம் மைதானத்தில் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டு சமநிலையில் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

வழக்கம்போல் சொதப்பிய இங்கிலாந்து

நேற்றைய போட்டிகள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 95, மூன்றாவது இடத்தில் வந்த வில் ஜேக்ஸ் 64 ரன்கள் என அதிரடியாக எடுத்துக் கொடுத்த போதும் அதை பயன்படுத்தி 350 ரன்கள் தாண்டி செல்வதற்கான வாய்ப்பு இருந்தது.

இங்கிலாந்து அணி வழக்கம் போல லெக் ஸ்பின் பலவீனத்தில் விழுந்தது. ஆடம் ஜாம்பாவுக்கு மூன்று விக்கெட்டுகள் கொடுத்தது மட்டும் இல்லாமல், பகுதிநேர லெக் ஸ்பின்னர் மார்னஸ் லபுசேனுக்கு முக்கிய மூன்று விக்கெட்டுகளை கொடுத்து 315 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் ருத்ரதாண்டவம்

இதைத்தொடர்ந்து 129 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 154 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார். இவருடன் இணைந்து விளையாடிய மார்னஸ் லபுசேன் 77 ரன்கள் எடுத்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதையும் படிங்க : 376 ரன்.. 53 வருடம் கழித்து இந்திய அணி மீண்டும் அசத்தல்.. அஸ்வின் மாஸ் பேட்டிங்.. முடிவுக்கு வந்த முதல் இன்னிங்ஸ்

இந்த குறிப்பிட்ட டிரெண்ட் பிரிட்ஜ் நாட்டிங்ஹாம் மைதானத்தில் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி எதிராக ரன் சேசிங் செய்த பொழுது ரோகித் சர்மா ஆட்டம் இழக்காமல் 114 பந்துகளில் 137 ரன்கள் எடுத்திருந்தது, வெற்றிகரமான ரன் சேஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்தது. ரோகித் சர்மாவின் இந்த தனித்துவ 6 வருட சாதனையை டிராவிஸ் ஹெட் நேற்று முறியடித்தார்.

- Advertisement -