ரிஷப் பண்ட் தினேஷ் கார்த்திக் அணியில் யாருக்கு இடம்? புஜாரா பளிச் பதில்!

0
79
Asiacup2022

நேற்று துவங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் போதும் மிகப்பெரிய போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி இரு அணி ரசிகர்களையும் தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி உலக கிரிக்கெட் அணிகளையும் உற்றுப் பார்க்க வைக்கும் ஒரு போட்டியாக இருக்கிறது. காரணம் அடுத்த சில மாதத்தில் டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இதனால் ஆசிய கோப்பை தொடரும் இந்தப் போட்டியும் அந்தந்த அணிகளை தாண்டி மற்ற அணிகள் உற்று நோக்கும் அளவிற்கு இருக்கிறது!

இந்திய அணியைப் பொறுத்தவரை எடுத்துக்கொண்டால் பேட்டிங் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் துறை என அனைத்திலும் வலிமையாக இருக்கிறது. சொல்லப்போனால் பேட்டிங்கில் கூடுதல் வலிமையாக இருக்கிறது. தற்போது இந்திய அணியில் கேப்டனுக்கும் பயிற்சியாளரும் இதுவே ஒரு தலைவலியாகவும் அமைந்து இருக்கிறது. மொத்த அணியைத் தேர்வு செய்வதிலும் அதிலிருந்து ஆடும் அணியை தேர்வு செய்வதிலும் பெரிய தலைவலி இருக்கவே செய்கிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக இடம்பெற்றுள்ள ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே நல்ல விளையாட்டு திறனோடு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரையுமே ஆடும் அணியில் வைப்பதற்கு அங்கு இடமில்லை. இரண்டு நல்ல வீரர்களில் ஒருவரைத்தான் தேர்வு செய்ய முடியும் என்பது எப்பொழுதுமே கேப்டனுக்கும் பயிற்சியாளரும் பெரிய தலைவலியான விஷயமாகும்.

தற்போது கேப்டன் ரோகித் சர்மாவோடு யார் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்பதைவிட இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக யார் இடம் பெறுவார்கள் என்பது தான் பெரிய கேள்வி குறியாகவும் எதிர்பார்ப்பாகவும் இந்திய ரசிகர்கள் இடையே இருந்து வருகிறது.

இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வரும் இந்திய அணியின் டெஸ்ட் வீரர் புஜாரா இதுகுறித்த கேள்விக்கு தனது ஆழமான விளக்கமான பதிலை தந்திருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி புஜாரா கூறும்பொழுது ” இருவரும் டி20 வடிவத்தில் மிகச் சிறப்பாக செயல்படுவதால் அணி நிர்வாகத்திற்கு யாரை தேர்வு செய்வது என்பது தலைவலியாக உள்ளது. நம்பர் ஐந்தில் ஒரு பேட்ஸ்மேன் தேவை என்றால் ரிஷப் பண்ட் சரியானவர். இறுதிகட்டத்தில் ஒரு பேட்ஸ்மேன் தேவை என்றால் தினேஷ் கார்த்திக் சரியானவர்” என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய புஜாரா ” சூரியகுமார் மிகவும் சிறப்பான ஒரு வீரர். ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்றால் மேலே ஒரு பேட்ஸ்மேனை அணியில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும். ஆனால் அதற்க்கு வாய்ப்பு கிடையாது. இதனால் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஒரே அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கிடையாது ” தெரிவித்தார்.

மேலும் விளக்கமாக தொடர்ந்தவர் ” தினேஷ் கார்த்திக்கின் பினிஷிங் கதாபாத்திரத்திற்கு ஹர்திக் பாண்டியாவை தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் முதல் பந்தில் இருந்தே அடிக்கக் கூடியவர். அவருக்கு ஸ்ட்ரைக் ரேட் 150க்கு மேலே இருக்கிறது. ரிஷப் பண்ட் இந்த வேலையைச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை. ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வரும்பொழுது 10 அல்லது 12 ஓவர்கள் தேவை. அப்படி வரும்பொழுது அவரால் ஒரு நல்ல ரன்னை தரமுடியும். அணி நிர்வாகம் இவரை தான் விரும்பும். இவரை ஐந்தாவதாக பேட் செய்ய வைக்கும். இவர் வலது இடது கை கூட்டணியை பேட்டிங்கில் அமைக்க உதவுவார் ” இன்று புஜாரா தெரிவித்திருக்கிறார்.